ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 300 அடிக்கப் போறது இந்த வீரர் தான் “- சுனில் கவாஸ்கர் கணிப்பு!

0
758
ishan kishan surya kumar yadav

இந்திய மற்றும் இலங்கை அணி களுக்கு இடையேயான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது . இது தொடர்பாக தேர்வு குழுவினரின் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என்று பிசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழு கலைக்கப்பட்ட பின்பும் புதிய தேர்வு குழு கமிட்டி இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் பழைய தேர்வு குழு கமிட்டியே இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் காயமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . தற்போது என் சி ஏ வில் பயிற்சி பெற்று வரும் ஹர்திக் பாண்டியா இந்த தொடருக்கும் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் . 2023 ஆம் ஆண்டின் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை ஆகிய இரண்டு தொடர்களையும் முன்வைத்து வலிமையான இந்திய அணியை தேர்வு செய்வார்கள் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பற்றியும் யார் இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் .. இது பற்றி பேசியுள்ள அவர்” சிகர் தவான் இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளில் பிரதான துவக்க வீரராக இருந்து வந்தார் . அவரது அனுபவம் மற்றும் அவர் ஒரு இடதுகை வீரர் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது ஆனால் கடந்த சில தொடர்களாக அவரது பார்ம் கேள்விக்குறியாக உள்ளது .

மேலும் அவருக்கு பதிலாக மாற்ற ஆட்டக்காரர்களாக விளையாடிய சுக்மன் கில் மற்றும் இஷான் கிசான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் . அதிலும் குறிப்பாக இஷான் கிஷான் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடி இரட்டை சதம் அடித்தார் . அவர் போட்டியின் 35 வது ஓவரிலேயே தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.

இன்னும் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் எளிதாக அவரால் ஒரு நாள் போட்டிகளில் முதல் வீரராக 300 ரன்களை எட்டி இருக்க முடியும் . அவரது ஆட்டம் மிகவும் அலாதியாக இருந்தது 100 ரண்களுக்கு பிறகு அவர் ஆடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது . என்னை பொறுத்தவரை ஒரு நாள் போட்டிகளில் 300 ரண்களை அடிக்க வேண்டும் என்றால் இசான் கிசான் தான் அடிப்பார் என்று கருதுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய கவாஸ்கர் ஸ்டிக்கர் தவானின் ஃபார்ம் மற்றும் அவரது வயதை கருத்தில் கொண்டு அவருக்கு பதிலாக இஷான் கிசானை தான் இந்திய அணி ரோகித் சர்மா உடன் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று தெரிவித்தார் . மற்றொரு துவக்க வீரரான சும்மங்கில் மாற்று ஆட்டக்காரராக அணியில் இடம் பெறலாம் என்று கூறினார் .