பந்து என்னை கடந்த வேளையில் சத்தம் வந்தது ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை – டிம் டேவிட்

0
4868

டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி இறுதி நொடி வரை பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெறும், ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பெங்களூரு அணி தகுதிபெறும் என்கிற நிலையில் போட்டி தொடங்கியது.

போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக போவல் 43 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அந்த அணியின் பிளே ஆப் சுற்றுக்காண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

போட்டியை தலைகீழாக திருப்பிய டிம் டேவிட்

14.3 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்திருந்தது. மீதமிருக்கும் 33 பந்துகளில் அந்த அணி வெற்றி பெற 65 ரன்கள் தேவை. அப்பொழுது அதிரடி வீரர் டேவிட் உள்ளே களமிறங்கினார்.

10 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் நான்கு சிக்சர் உட்பட 34 ரன்கள் குவித்து பதினோராவது பந்தில் ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட 10 பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்று விட்டுப் போனார் என்று தான் கூற வேண்டும். நேற்று மும்பை அணி வெற்றி பெற முழுக்க முழுக்க இவரே காரணம் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்ட டேவிட்

பதினைந்தாவது ஓவரின் முதல் பந்தை தாகூர் டேவிட்டுக்கு எதிராக வீசினார். அந்த பந்து டேவிட்டின் பேட்டில் சற்றே எட்ஜாகி சென்றது. தாகூர் அவுட் என்று அப்பீல் செய்த வேளையில் நடுவர் அவுட் இல்லை என்று கூறிவிட்டார். டெல்லி அணி வீரர்கள் ஒரு சிலர் உடனடியாக டிஆர்எஸ் எடுக்கும்படி வலியுறுத்தினார்.

ஆனால் ரிஷப் பண்ட் டிஆர்எஸ் எடுக்கவில்லை. மறுபடியும் அந்த வீடியோவை ஓட்டி பார்க்கையில் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் பட்டது உறுதியானது. அதிர்ஷ்டமின்றி ரிஷப் பண்ட் முடிவு தவறாக அமைந்தது.

என் டி ஆர் எஸ் எடுக்கவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு களத்தில் இருந்த ஒரு சில வீரர்கள், பேட்டில் பட்டிருக்க வாய்ப்பு இல்லாதது போன்று நம்பிக்கை இல்லாதது போல நின்றனர். எனவே நான் எடுக்கவில்லை என்று கூறினார்.

கேள்விக்கு பதிலளித்த டிம் டேவிட்

பந்து உங்களுடைய பேட்டில் பட்டது உங்களுக்கு அப்பொழுது தெரிந்ததா என்று டிம் டேவிட் இடத்தில் கேட்கப்பட்டது. “ஏதோ ஒரு சத்தம் வந்தது போல உணர்ந்தேன். அதன் காரணமாகவே நான் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. ஆனால் பந்து என்னுடைய பேட்டில்தான் பட்டது என்று நான் நினைக்கவில்லை. என்னுடைய லெக்பேடில் பட்டு சென்று இருக்கும் என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக நான் நேற்று அவுட் ஆகவில்லை என்று புன்னகைத்தபடி டிம் டேவிட் கூறினார்.

மேலும் பேசிய அவர் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே நேற்று காலையில் ஆர்சிபி அணி கேப்டன் ஃபேப் டு பிளசிஸ் இடம் இருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்தது என்று கூறினார். அவர் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மும்பை நிறத்தில் (மும்பை அணி வெற்றி பெற ஆதரவு தெரிவிக்கும் விதத்தில்) இருந்தனர். அவர்களது ஆசைப்படி தற்போது எங்களது அணி வெற்றி பெற்றுள்ளது. நான் அவர்களுக்கு என்ன குறுஞ்செய்தி அனுப்புவது என்ற யோசனையில் இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.