இந்த முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் கட்டாயம் வீழ்த்துவோம்!

0
604
Australia

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் மிகப் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இந்தியா ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தற்போது நீடிக்கின்றன!

ஆஸ்திரேலியா அணி இந்த வாய்ப்பில் முதல் இடத்திலும் இந்திய அணி இரண்டாவது இடத்திலும் தெனாப்பிரிக்க அணி மூன்றாவது இடத்திலும் அடுத்து நியூசிலாந்து அணியும் இருக்கின்றது!

- Advertisement -

இந்த நிலையில் அடுத்த மாதம் பார்டர் கவாஸ்கர் டிராபி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியா வரவிருப்பது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மிகப் பரபரப்பான ஒரு தொடராக அமைய இருக்கிறது!

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்து விளையாடி 2-0 எனத் தொடரை வென்றது. இந்தத் தொடரை முழுமையாகக் கைப்பற்றி இருந்தால் ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும். அந்த வாய்ப்பு நூலிலையில் தவறி போயிருக்கிறது!

இந்திய அணி நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0, 3-1 என வெல்லும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் இந்திய ஒரு பயணத்தின் வெற்றி குறித்து பேசுகையில் ” எப்போதும் இருந்தது போல இப்போதும் எங்களுக்கு வெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இது மற்றும் ஒரு அருமையான கோடைக்காலம். நாங்கள் மிக நன்றாக தகவமைந்து கொண்டிருப்பது போல உணர்கிறேன். கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது இந்திய சுற்றுப்பயணத்தின் வெற்றிக்கு எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்தியாவிற்கு நாங்கள் யாரும் பார்வையற்றவர்களாக செல்லவில்லை. அடுத்த 12 மாதங்கள் எப்படி செயல்படுவது என்று நாங்கள் சில வாரங்கள் சிந்திப்போம். பின்னர் உண்மையிலேயே நாங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இந்தியா சென்று தொடரை கைப்பற்றுவோம் ” என்று கூறி இருக்கிறார்!