“இந்த முறை ஐபிஎல்ல இவங்களோட விக்கெட்ட நான் எடுக்கணும்” – தன் கனவு குறித்து உம்ரான் மாலிக்!

0
503
Umran Malik

இந்திய கிரிக்கெட்டில் என்றும் இல்லாத அளவுக்கு தற்பொழுது வேகப்பந்து வீச்சு துறை மிக மிக வலுவான முறையில் இருக்கிறது. இதுவரை இந்திய அணிக்கு வெளிநாடு டெஸ்ட் வெற்றிகள் பெரிதாக கிடைக்காத காரணம் நல்ல வேகப்பந்து வீச்சு அமையாததுதான்.

இதற்கு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி கூட்டணி மிகச் சிறப்பான முறையில் தீர்வைக் கண்டறிந்து வேகபந்துவீச்சாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளை பெற்றதோடு உள்நாட்டிலும் வேகப்பந்து வீச்சை பிரதான ஆயுதமாக பயன்படுத்தி வெற்றி கண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சு துறை மீதான எச்சரிக்கையும் கவனமும் மற்ற அணிகளுக்கு உருவானது. இதன் மூலம் புதிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஊக்கம் கொண்டு உருவாக ஆரம்பித்தார்கள்.

இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் பொருட்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சுத் துறையில் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வீசக்கூடிய இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளராக தற்பொழுது திகழ்கிறார்!

கடந்த ஆண்டுக்கு முன் ஆண்டு நடராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வலை பயிற்சி பந்துவீச்சாளராக ஹைதராபாத் அணிக்கு இருந்த உம்ரான் மாலிக் விளையாடும் வாய்ப்பை பெற்று தனது வேகத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இதற்கு அடுத்து அடுத்த ஆண்டு 14 போட்டிகளில் 22 விக்கட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணியிலும் விளையாடும் வாய்ப்பை தற்பொழுது பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இவர் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் தான் கைப்பற்ற விரும்பும் விக்கட்டுகள் யார் யார் உடையது என்ற தனது கனவை பகிர்ந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” இந்த முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விராட், ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரது விக்கட்டுகளை கைப்பற்ற விரும்புகிறேன்” கூறி இருக்கிறார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!