ஆசியக் கோப்பையை இந்த அணியே வெல்லும்; இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் இந்த அணியே வெல்லும் – ரிக்கி பாண்டிங் கணிப்பு!

0
2385
Ricky ponting

வரும் ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆறு ஆகிய அணிகளை கொண்டு டி20 வடிவத்தில் 15வது ஆசிய கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது. ஆறு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நான்கு அணிகளைக் கொண்டு சூப்பர் 4 சுற்றில், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளோடு ஒவ்வொரு முறை மோதவிட்டு, அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றி, இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பையை வெல்லும்!

இந்த முறையில் ஆசிய கோப்பை போட்டி நடத்தப்படுவதால் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும், முதல் சுற்றில் கட்டாயம் போதும், அதேபோல் தங்கள் குழுவில் இருந்து அடுத்த சுற்றுக்கு தேர்வாகும் அணியாக இந்த இரு அணிகள் தான் இருக்கும், எனவே சூப்பர் 4 சுற்றிலும் இந்த இரு அணிகளும் மீண்டும் மோதிக்கொள்ளும். இந்தச் சுற்றிலும் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டிக்கு இந்த இரு அணிகளும் தகுதி பெற்று ஒரே தொடரில் மூன்றாவது முறையாக மோதிக்கொள்ளும்.

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் இடையே இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்கள் சில அரசியல் காரணங்களால் நிறுத்தப்பட்டு வருடங்கள் சில ஆகிறது. இந்த நிலையில் ஒரே தொடரில் மூன்று முறை இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள வாய்ப்பு இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆசிய கோப்பைக்கான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது

இந்திய கேப்டன்களில் அசாருதீன் எந்திர சிங் தோனி இருவரும் இரண்டு முறை ஆசிய கோப்பையை வென்று இருக்கிறார்கள். இதுவரை நடந்த ஆசிய கோப்பைகளில் இந்திய அணி 7 முறை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியே வென்று நடப்பு ஆசிய சாம்பியன் ஆக இருக்கிறது.

ஆசிய கோப்பைகளில் அதிக ரன் அடித்த வீரராக இலங்கையின் ஜெயசூர்யாவும், அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளராக மலிங்காவும் இருக்கிறார்கள். இந்த முறை ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் இலங்கையில் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டு நிலைமை சிக்கலாக இருப்பதால் ஆசிய கோப்பை யுனைடெட் அரபு எமிரேட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே வருடத்தில் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதால் ஆசிய கோப்பை போட்டிகள் அணிகளுக்கு மட்டுமே முக்கியமாய் இல்லாமல், இந்த தொடரில் கலந்து கொள்ளும் அணிகளை கவனித்து வரும் மற்ற அணிகளுக்குமே முக்கியமான தொடராகும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்று இருந்தது. இதற்கு இந்திய அணி திருப்பி பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்தநிலையில் லெஜெண்ட் பேட்ஸ்மேனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ரிக்கி பாண்டிங் ஆசிய கோப்பையை எந்த அணி வெல்லும் இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் ஆசிய கோப்பை முதல் போட்டியில் யார் வெல்வார்கள் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

ரிக்கி பாண்டிங் இது சம்பந்தமாக கூறும்பொழுது ” ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தில் இந்திய அணியே வெற்றி பெறும். மேலும் இந்த ஆசிய கோப்பையை இந்திய அணியே வெல்லும். எந்த ஒரு தொடரிலும் இந்திய அணியை வீழ்த்துவது என்பது கடினமான செயலே. தற்போதைய இந்திய அணி மற்ற அணிகளை காட்டிலும் மிக வலுவான அணியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்!