“2023 உலக கோப்பையில் இந்தியாவை இந்த ஒரு டீம்தான் வெளிய அனுப்ப போகுது!” – ஆஸி லெஜன்ட் ஆச்சரியமான கணிப்பு!

0
4836
Hogg

கிரிக்கெட்டில் கடைசியாக டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு உலகக்கோப்பை தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. நடுவில் டி20 வடிவத்திற்கு உலகக்கோப்பை 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இதற்கு முன்னதாக முதன் முதலில் 1975 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டது.

- Advertisement -

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இரண்டு உலகக் கோப்பையை வென்ற அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி இருக்கிறது. அதிகபட்சம் உலக கோப்பையை வென்ற அணியாக ஐந்து முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா இருக்கிறது. இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்று நடப்பு சாம்பியன் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் 13-வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாலும், பல சிறப்புமிக்க தருணங்களையும் நினைவுகளையும் உள்ளடக்கி இருக்கக்கூடிய உலகக்கோப்பை தொடர் என்பதாலும், அதிகபட்ச சவால்கள் இருக்கும் உலகக் கோப்பை தொடர் என்பதாலும், ரசிகர்கள் தாண்டி கிரிக்கெட் வீரர்கள் வரை எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை தொடராக இருக்கிறது.

- Advertisement -

நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடர் குறித்தும் இந்திய அணி குறித்தும் பேசியுள்ள ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் கூறுகையில்
“ஆஸ்திரேலியா ஸ்டார்க் உடன் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதலை கொண்டு உள்ளார்கள். அவர் புதிய பந்தில் சிறிது சேதாரங்களை எதிரணிகளுக்கு ஏற்படுத்தலாம். எங்களிடம் சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஜாம்பா இருக்கிறார். அவர் மிடில் ஓவர்களை கட்டுப்படுத்துவார். இப்படி சிறப்பான விஷயங்கள் ஆஸ்திரேலியாவிடம் இருக்கிறது.

இந்தியாவை நாக் அவுட் போட்டியில் வீழ்த்தி, உலகக் கோப்பையில் இருந்து வெளியே அனுப்பக்கூடிய அணியாக ஆஸ்திரேலிய மட்டும்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசஸ் தொடர்களை வென்று உள்ளார்கள். இதனால் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஸ்ரேயாஸ் ஐயரைஎங்கே வைப்பது? ராகுல் காயம் சரியாகி விட்டதா?என்ற கேள்விகள் இருக்கிறது. ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால் ராகுலை வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. மிடில் ஆர்டரில் யார் இருப்பார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அது ரவீந்திர ஜடேஜாவாக இருக்கலாம். மேலும் சர்துல் தாக்கூர் உடன் செல்வார்களா என்பதையும் பார்க்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!