டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்த அணிக்குத்தான் அதிக வாய்ப்பு – இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கணிப்பு!

0
303
Butler

கடந்த மாதத்தில் 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செய்தது.

இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 2-3 என பின்தங்கி இருந்து, கடைசி இரு ஆட்டங்களில் வென்று தொடரை 4-3 என வென்று அசத்தி, பாகிஸ்தான் அடிக்கடி நிர்வாகத்திற்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கியது.

இந்த தொடருக்கு ஆரம்பத்தில் ஜாஸ் பட்லர் கேப்டனாக சென்றிருந்தார். ஆனால் காயத்தால் அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை. இந்த தொடர் முழுக்க மொயின் அலி கேப்டனாக இருந்து இங்கிலாந்து அணியை வழி நடத்தினார்.

இதற்கடுத்து பாகிஸ்தானில் இருந்து கிளம்பிய இங்கிலாந்து அணி நேராக ஆஸ்திரேலியா வந்து ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்தத் தொடரின் கடைசி போட்டி மழையால் பாதிக்கப்பட, இங்கிலாந்து அணி 2-0 என ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரின் நாயகனாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் அறிவிக்கப்பட்டார். அவர் இந்த தொடரில் இரண்டு அதிரடி அரை சதங்கள் விளாசி இருந்தார்.

இந்தத் தொடருக்குப் பிறகு வருகின்ற டி20 உலகக் கோப்பை குறித்து ஜாஸ் பட்லர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். உலகக் கோப்பையை வெல்ல எந்த அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது? தங்கள் அணி எப்படி நகர்வுகளை மேற்கொள்ள இருக்கிறது? என்பது குறித்து அவர் தெரிவித்தார்.

ஜாஸ் பட்லர் பேசும்பொழுது ” டி20 கிரிக்கெட்டில் ஒரே ஒரு வீரர் உங்களை ஆட்டத்திலிருந்து வெளியே தள்ளி விடுவார். உலகக்கோப்பை வரலாற்றை எடுத்துப் பார்த்தால், உலக கோப்பை தொடரை நடத்தும் அணிக்கு மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு வந்து நிறைய வீரர்கள் நிறைய அணிகள் நிறைய போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இங்குள்ள சூழலை சாதகங்களை ஆஸ்திரேலிய அணியை விட வேறு யாரும் அறிந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நாங்கள் மிக நல்ல முறையில் தயாராகி இருக்கிறோம். அதேபோல் நாங்கள் கடந்த தொடர்களை எடுத்து ஆராய்ச்சி செய்ய மாட்டோம். நாங்கள் தினமும் விஷயங்களைக் கற்றுத் தேர்ந்து வருகிறோம். அடுத்த வாரம் துவங்க இருக்கும் எங்கள் போட்டிக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் ” என்று கூறியிருக்கிறார்!