இந்த நிலை எனது பாக்கியம் ; நான் நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன்; ஷிகர் தவான் நெகிழ்ச்சி பேட்டி!

0
1072
Shikardhawan

தென் ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியது.

இதை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக நாளை ரோகித் சர்மா தலைமையில் கிளம்ப இருக்கிறது.

- Advertisement -

இதனால் அடுத்து தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய வீரர்கள் கொண்ட ஒரு அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அணியில் ஷிகர் தவன் கேப்டனாக இருக்கிறார் துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருக்கிறார். மேலும் ருத்ராஜ், சுப்மன் கில், ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஸ் கான், முகமத் சிராஜ் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த 3 போட்டி கொண்ட தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை பீகார் மாநிலம் லக்னோ நகரில் தொடங்க இருக்கிறது. மழை காரணமாக இன்று இந்திய வீரர்களின் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டிக்கான தயாரிப்பில் இருக்கும் ஷிகர் தவன் பேசும்பொழுது
“என்னால் முடியும் போதெல்லாம், என் அனுபவ அறிவை இளைஞர்களுக்கு கடத்த முயற்சி செய்கிறேன். இப்போது என் மீது புதிய பொறுப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு சவால்கள் பிடித்திருக்கிறது. நான் சவால்களில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே பார்க்கிறேன். இதை நான் அனுபவிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஷிகர் தவன்
” தற்போது என்னுடைய இலக்கு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை ஆகும். இதற்காக என்னை நல்ல உடல் தகுதியுடன் வைத்திருக்கவும், நல்ல மனநிலையுடன் போட்டியை அணுகவும் வைத்திருப்பது அவசியமானது. நான் தற்போது இதற்குதான் முன்னுரிமை தருகிறேன். அழகான கிரிக்கெட் கேரியரை பெற்ற நான் இதை ஒரு பாக்கியமாக நினைக்கிறேன். எதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கூறியிருக்கிறார்.

32 வயதான ஷிகர் தவன் இந்திய அணிக்காக 158 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 92.07 ஸ்ட்ரைக் ரேட் உடன், 6647 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் முப்பத்தி எட்டு அரைசதங்கள் அடங்கும். இந்திய அணி நிர்வாகம் தற்போது இவரை ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே சிறப்பு துவக்க ஆட்டக்காரராக பயன்படுத்தி வருகிறது.