“அஷ்வினை பார்த்து கத்துக்கனும்” – மும்பை இந்தியன்ஸ் வீரர் மீது மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச் தாக்கு!

0
1479
Ashwin

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் வென்று தற்பொழுது இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரை சதங்கள் அடித்து வலுவான துவக்கம் தந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த விராட் கோலி ஆரம்பத்தில் பொறுமை காட்டி பின்பு வழக்கமான முறையில் விளையாடி 206 பந்துகளில் 11 பவுண்டரி உடன் 121 ரன்கள் குவித்து, அணி நல்ல நிலைமைக்கு செல்ல உதவினார். இவருடன் கூட்டு சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் அரை சதம் விளாசினார்.

இதற்கு அடுத்து விளையாட வந்த இஷான் கிசான் மற்றும் அஸ்வின் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. மற்றவர்கள் மெதுவாக விளையாடிய நேரத்தில் இஷான் கிஷான் வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தார். ஆனால் அவர் 37 பந்துகளில் நான்கு பவுண்டரி உடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து விட்டார்.

இந்த நிலையில் அணி 400 ரன்களை கடப்பதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 438 ரன்கள் சேர்த்தது. நேற்று இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர் இசான் கிஷான் பற்றி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜாகீர் கான் சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இசான் கிஷான் நன்றாக ஆடத் தொடங்கினார். இதன் காரணமாகவே அவர் ஆட்டம் இழந்தது அவருக்கு ஏமாற்றமான ஒன்றாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் 30, 40 பந்துகள் விளையாடி 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழப்பதற்கு, ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்து விடலாம் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சொல்லப்படும்.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவது போல விளையாட இந்த முறையில் ஆட்டம் இழப்பது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் உண்மையிலேயே ஏமாற்றம் அடைய வைக்கும். அவருக்கு இன்று ஒரு நல்ல நாக் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அவர் அதை வீணாக்கி விட்டார்.

அஸ்வின் ஆட்டம் மிகச் சிறப்பானது. இது போன்ற ஒரு கட்டத்தில் நீங்கள் அதிக ரண்களை சேர்க்க முடியும். இப்படி விளையாடி நீங்கள் அணியை நான் ஒரு ரன்கள் தாண்ட வைத்தால் அது எல்லாவற்றையும் எளிதாக்கிவிடும்.

அஸ்வின் மிகவும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். மறுமுனையில் இருந்து அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்காது என்று அவருக்கு தெரியும். எனவே விரைவாக ரன் அடித்தால் அது நன்றாக இருக்கும் என்று உணர்ந்த அவர் விரைவாக ரன்கள் சேகரித்தார். அதற்காக அவர் கடினமாக முயற்சி செய்தார்” என்று பாராட்டி பேசி இருக்கிறார்!