“இதே வேலையா போச்சு!” – பாகிஸ்தான் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு ஐசிசி நேரடியான பதில்!

0
691
ICC

நடப்பு உலகக்கோப்பை தொடரில் பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு தலைப்பட்சமாக பாகிஸ்தான் அணியை வென்றது!

இந்த போட்டியின் போது சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்து, அது குறித்து சமூக வலைதளங்களில் இரண்டு தரப்புகள் கடுமையாக மோதிக் கொள்வது தற்பொழுதும் வரை கூட தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக் கோப்பையில் நடந்த போட்டி ஐசிசி நடத்தியது போல தெரியவில்லை, பிசிசிஐ இரு நாடுகளுக்கு இடையே நடத்திய தொடர் போல தெரிந்தது, பாகிஸ்தான அணியை ஊக்கப்படுத்தும் எதுவும் மைதானத்தில் ஒலிக்கவில்லை, இதுவும் தோல்விக்கு காரணம்தான் ஆனால் இதைச் சாக்காக சொல்ல மாட்டேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குனர் மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இவரது குற்றச்சாட்டு குறித்து இந்திய தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இன்றைய நாளில் அவரது குற்றச்சாட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இதைவிட மிக முக்கியமாக இப்படியான விஷயங்களை கூறி பாகிஸ்தான் அணியின் படுதோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம் என்று வாசிம் அக்ரம் மிகக் கடுமையான கோபத்தை மிக்கி ஆர்தர் மீது வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து ஐசிசி கிரேக் பார்க்லே கூறும் பொழுது ” நாங்கள் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும், பல்வேறு தரப்புகளில் இருந்து இப்படியான பேச்சுகள் வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதையெல்லாம் அகற்றி விட்டு நாங்கள் வேலை செய்ய பார்ப்போம்.

மேலும் தற்பொழுதுதான் உலகக் கோப்பை ஆரம்பித்திருக்கிறது. மேற்கொண்டு மொத்த விஷயங்களும் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும். உலகக் கோப்பை மற்றும் கிரிக்கெட்டை சுற்றியுள்ள விஷயங்களை எப்படி மேம்படுத்தலாம் என்று நாங்கள் யோசிப்போம். இது இன்னும் ஒரு திருப்தியான உலக கோப்பையாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!