“வேர்ல்ட் கப்ல இருக்க இதான் தம்பி உனக்கு கடைசி சான்ஸ்!” – நட்சத்திர வீரரை எச்சரித்த ரிதிந்தர் சிங் சோதி!

0
307
Sodhi

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியானது நேற்று அறிவிக்கப்பட்டது . டி20 போட்டி தொடர்களுக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டன் பதவியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்திய ஒரு நாள் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் .

சமீப காலமாக ஒரு நாள் டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து ரண்கள் எடுக்க தவறி வருகிறார் கேஎல். ராகுல். சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் அரை சதம் அடித்த அவர் மற்ற இரண்டு போட்டிகளிலும் குறைவான ரண்களில் ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை . சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியிலும் சரியாக ஆடாததால் இலங்கை தொடருக்கான டி20 போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரிதின்தார் சிங் சோதி “இதுதான் கே எல் ராகுலுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் . இது குறித்து மேலும் பேசியுள்ளவர் கே எல் ராகுல் இந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை பயன்படுத்தி தொடர்ச்சியாக ரன்களை குறிக்க வேண்டும் . இல்லையென்றால் t20 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டது போல ஒரு நாள் போட்டி அணையில் இருந்தோம் நீக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கமாக பேசியுள்ள சோதி ” “கே எல் ராகுல் ஒரு நல்ல பேட்ஸ்மேன் தான். அவரது டெக்னிக் மற்றும் ஆட்டத்தில் எந்த குறையும் இல்லை ஆனால் அவரது மன உறுதி மிகவும் குறைந்து காணப்படுவதாக உணர்கிறேன் அதனை சரி செய்து கொண்டு மீண்டும் பார்முக்கு திரும்பி ரண்களை குளிக்க வேண்டும். இதுதான் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக அவருக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பாக நான் பார்க்கிறேன். இந்த தொடரிலும் அவர் தோல்வி அடையும் பட்சத்தில் நிச்சயமாக அணியில் இருந்து நீக்கப்படுவார்” என்று கூறினார் .

இந்திய அணியில் அந்த அளவிற்கு வீரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கிறது . ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ்,இசான் கிசான் ,சுப்மன் கில் என வீரர்கள் திறமையான ஆட்டங்களை வெளிப்படுத்தி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அதனை மனதில் வைத்துக் கொண்டு கேஎல்.ராகுல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தவான் பற்றி பேசியவர் தவான் தொடர்ச்சியாக உள்நாட்டுப் போட்டிகளில் கண்களை சேர்த்து இந்திய அணிக்கு இடம் பெற முயற்சி செய்ய வேண்டும். அவரிடம் ஏராளமான அனுபவம் இருக்கிறது அதனை பயன்படுத்தி உள்நாட்டுப் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் தொடர்ச்சியாக ரண்களை குறிப்பதன் மூலம் இந்தியா அணிக்கு இடம்பெற முயற்சிக்கலாம் என்று தெரிவித்தார் .

@⁨Aadhan⁩