“இவ்வளவு ரன் அடிச்சும் இதனாலதான் தோத்தோம்.. ஈஸியா சொல்லிடலாம் செய்ய முடியல!” – ஆஸி கேப்டன் பேச்சு!

0
9127
Rinku

இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டது. ஆட்டத்தின் கடைசி பந்து வரை சென்ற பரபரப்பான இந்த போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி இந்த தொடரை பல பரிசோதனை முயற்சிகளுக்கு பயன்படுத்துவதாக இருந்தது.

- Advertisement -

இந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரராக ஸ்மித் வந்து அரைசதம் அடித்தார். ஜோஸ் இங்கிலீஷ் அபாரமாக விளையாடி 50 பந்தில் 110 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 28 ரன் குவித்தது.

இதற்கடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே ஆட்டம் இழந்து விட்டார்கள்.

மேலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷான் இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள்.

- Advertisement -

இஷான் கிஷான் 58 சூரியகுமார் யாதவ் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்கள். ஆனால் அக்சர் படேல் தேவையில்லாமல் ஆட்டம் இழக்க, போட்டி கடைசி பந்து வரை சென்று பரபரப்பாக முடிந்தது. ரிங்கு சிங் 22 ரன்கள் எடுத்து, இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் கூறும்பொழுது “இறுதியில் இது ஒரு நல்ல போட்டியாக மாறியது. இங்லீஷ் எங்களுக்காக ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினார். இந்த இளம் இந்திய வீரர்கள் அதிக டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் விளையாடுகிறார்கள். அதனால் இவர்களுக்கு இது எளிதாக இருக்கிறது.

நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன். ஆனால் எங்களால் நல்ல யார்க்கர்களை வீச முடியவில்லை. குறிப்பாக இதுபோன்ற சிறிய ஈசியாக சொல்லிவிடலாம் ஆனால் செய்வது கடினம்.

நாங்கள் இந்த போட்டியில் இருந்து நிறைய பாசிட்டிவ்வான விஷயங்களை எடுக்க வேண்டும். இங்லீஷ் பேட்டிங் கிளாஸ் சிறப்பாக இருந்தது. நாங்கள் நன்றாக செய்தோம் என்று நினைக்கிறோம். எல்லீஸ் கடைசியாக ஒரு அருமையான ஓவரை வீசினார். இதனால் ஆட்டம் கடைசி பந்து வரை சென்றது!” என்று கூறியிருக்கிறார்!