“இதனால்தான் தோற்றோம்!” – தொடர் தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்!

0
1967
Rohitsharma

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பேசிய கேப்டன் ரோஹித் அணியின் பந்து வீச்சு துவக்கத்தில் ஆட்டத்தின் மிடில் ஓவர்களிலும் இறுதி ஓவர்களிலும் அதிகமான ரன்களை முதல் போட்டியை போலவே விட்டுக் கொடுத்து விட்டோம் . மெஹதி ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர் அவர்களின் ஆட்டம் தான் பங்களாதேஷ் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறினார் .

மேலும் அவரது காயம் குறித்த கேள்விக்கு “அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை இரண்டு மூன்று தையல்கள் மட்டுமே போடப்பட்டுள்ளது அதனால் என்னால் பேட்டிங் ஆட முடிந்தது” என்று கூறினார் . மேலும் பேசிய அவர் 70 ரன்கள் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப்புகளால் வெற்றி பெற முடியாது அவற்றை 120 ரன்கள் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்புகளாக மாற்ற வேண்டும் அப்பொழுதுதான் வெற்றி இலக்கை அடைய முடியும் “என்று தெரிவித்தார் .

ஒரு நாள் தொடர் பற்றிய கேள்விகளுக்கு “போட்டிகளில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும் ஆட்டத்தில் இருக்கக்கூடிய நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு அணியை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வோம் “என்று கூறினார்.

அணியின் வீரர்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர் “அணியில் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது சில வீரர்கள் காயம் ஏற்படுவதற்கான அறிகுறிகளோடு உள்ளனர் அதனால் ஒவ்வொருவரையும் நன்கு கவனித்து வருகிறோம் . இறுதிப்போட்டியில் வெற்றி வெற்றி பெற முயற்சிப்போம் “என்று கூறினார் .

ஆடுகளம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தவர் ” புதியதாக ஆட வரும் பேட்ஸ்மன்களுக்கு பந்துவீச்சை எதிர்கொள்வது சிரமமாக உள்ளது . ஒரு பேட்ஸ்மேன் களத்தில் நின்று ஆடிவிட்டால் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து ஆடினால் அணி வெற்றிக்கு உதவி புரிந்திருக்கும்” என்றும் கூறினார் .