இதனால்தான் விபத்து நடந்தது ; ரிஷப் பண்ட் வெளியிட்ட தகவல்!

0
746
Rishab Pant

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பேட்டிங்கில் அதிரடியான தாக்கத்தை ஏற்படுத்தியவர் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட். இந்த ஆண்டு பிசிசிஐயின் டெஸ்ட் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் வென்று இருக்கிறார்!

நேற்று மிக ஆபத்தான சாலை விபத்து ஒன்றில் தன் அம்மாவை பார்க்க தன் சொந்த ஊரான உத்தரகாண்ட் செல்லும்பொழுது சிக்கி தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!

இவரது விபத்து குறித்து பேசி உள்ள காவல்துறை, 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி இருக்கும் நெடுஞ்சாலையில் அவர் குறிப்பிட்ட வேகத்தில் தான் சரியான முறையில் வாகனத்தை இயக்கி இருக்கிறார் என்றும், மேலும் அவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

மேலும் அவர் அதிவேகமாகவோ இல்லை குடித்துவிட்டு வாகனத்தில் ஓட்டி இருந்தாலோ டெல்லியில் இருந்து அவரால் வாகனத்தை நல்ல முறையில் ஓட்டி வந்திருக்க முடியாது எனவும், அதை டெல்லியில் இருந்து விபத்து நடந்த இடம் வரை உள்ள சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் ரிஷப் பண்ட்டை மருத்துவமனையில் சந்தித்து பேசிய டெல்லி மற்றும் டிஸ்ட்ரிக் கிரிக்கெட் அசோசியேஷன் டைரக்டர் சியாம் சர்மா ரிஷப் பண்ட் விபத்து எப்படி நடந்தது என்று கூறியதாக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது
” அவர் தற்போது நலமாகவும் விரைவாக குணமாகி வருகிறார். பிசிசிஐ மருத்துவர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் உடன் தொடர்பில் உள்ளார்கள். பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை தொடர வேண்டுமா என்று யோசித்து வருகிறது. சாலையில் இருந்த ஒரு பள்ளத்தை சமாளிக்க வாகனத்தை திருப்பியதால் விபத்து நிகழ்ந்ததாக ரிஷப் பன்ட் கூறினார்!” என்று தெரிவித்திருக்கிறார்!