“எனக்கு இதனால்தான் தினேஷ் கார்த்திக் வேண்டாம் ரிஷப் பண்ட் வேண்டும்” – கவுதம் கம்பீர் மீண்டும் அதிரடி கருத்து!

0
733
Gambhir

தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுக் கொண்டுவரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது!

இந்த நிலையில் இந்த ஆட்டம் குறித்து பல முன்னாள் வீரர்களும் பல கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். இந்த ஆட்டத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளும் எப்படியான ஆடும் அணியை அமைப்பார்கள்? எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் எந்தெந்த வீரர்கள் ஒதுக்க படுவார்கள் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது!

- Advertisement -

இந்திய அணியைப் பொறுத்தவரை எடுத்துக்கொண்டால் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இல்லாததால், அவர் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், அவர் இடத்திற்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை கொண்டுவர முடியுமா முடியாதா? அல்லது தினேஷ் கார்த்திக் போதுமா? என்பதான விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்று வந்தது.

இப்படியான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தினேஷ் கார்த்திக் சில போட்டிகளாக தொடர்ந்து இடம் பெற்று வந்தார். மேலும் “பாகிஸ்தான் அணி உடன் விளையாடும் இந்திய அணி எது என்று ஏற்கனவே முடிவு செய்தாயிற்று. விளையாடும் வீரர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டுவிட்டது. எனக்கு கடைசி நேரத்தில் அணியை மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது “என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எப்படியான ஆடும் அணி அமைய வேண்டும் எந்த வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கம்பீர் தனது கருத்தை முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும்பொழுது “எனது ஆடும் அணியில் ரிஷப் பண்ட் ஐந்தாவது வீரராகவும், ஆறாவது ஏழாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் இடம்பெறுவார்கள். ஆனால் நாம் பார்த்து பயிற்சி ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விளையாடி வந்தார். ஆனால் அவர் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் இறங்கி விளையாடவில்லை. அவர் 7வது இடத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். அவரை மேலே விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகமும் விரும்பவில்லை விளையாட அவரும் விரும்பவில்லை” என்றவர்…

மேலும் தொடர்ந்து ” வெறும் 10 பந்துகளை சந்திப்பதற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பேட்ஸ்மேனை தேர்வு செய்யக்கூடாது. ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சீக்கிரம் போய்விட்டால் மேலே வந்து விளையாட பேட்ஸ்மேன் தேவைப்படும். அப்படித்தான் அணியை தேர்வு செய்ய வேண்டும். இந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் மிகச்சரியாக வருவார். இப்படி இல்லாவிட்டால் அக்சர் படேலை ஐந்தாவது இடத்திற்கு முன்கூட்டியே சீக்கிரம் அனுப்ப வேண்டும். ஹர்திக் பாண்டியாவை ஐந்தாவது இடத்திற்கு அனுப்ப இந்தியா விரும்பாது. இது ஆபத்தாகத்தான் போய் முடியும்” என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக கூறியிருக்கிறார்!