“கடைசி ஓவரை அக்சர் படேலுக்கு இதனால் தான் தந்தேன்” – ஹர்திக் பாண்டியா மாஸ் பேச்சு!

0
1095
Hardikpandya

இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் இன்று மும்பையில் முதல் டி20 போட்டி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் அணியை கொண்டு விளையாடப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இருக்கிறது!

தற்போதைய காலகட்டத்தில் கிரிக்கெட்டில் வெள்ளை பந்து போட்டிகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தகுந்தார் போல் தகவமைந்து கொள்ள இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது. இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மாற்றத்திற்கு இலங்கை அணி உடனான இந்த தொடர் தான் துவக்கம்!

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இசான் கிசான், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் ஆகியோரது பேட்டிங் பந்தளிப்பால் கௌரவமான 162 என்ற ரன்னை எட்டியது!

இதற்கு அடுத்து இலங்கை அணியை அறிமுக பந்துவீச்சாளர் சிவம் மாவி நன்றாக கட்டுப்படுத்தினார். ஆனாலும் ஆட்டம் கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற எளிதான போக்குக்கு நகர்ந்துவிட்டது.

இந்த நிலையில் கடைசி ஓவர் யாரும் எதிர்பார்க்காத விதமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா அக்சர் படேலுக்கு தந்து அதிர்ச்சி அளித்தார். அச்சர் பட்டேல் ஒரு சிக்சர் தந்தாலும் எப்படியோ கட்டுப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெற செய்துவிட்டார். இறுதியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா இப்போது உங்களை கேப்டன் என்று அழைக்க வேண்டுமா என்று கேட்டதும் சிரித்தபடியே ஆமாம் என்று ஆரம்பித்தார். அவர் பேசுகையில் “எனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண பிடிப்புதான் நான் இப்போது பரவாயில்லை. நான் சரியாக தூங்கவில்லை மேலும் சரியாக தண்ணீர் குடிக்கவில்லை. இதனால் எனக்கு திரவ நிலை குறைந்தது. இதனால் பிடிப்பு ஏற்பட்டது!” என்று ஆட்டத்தின் இடையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அக்சர் படேலுக்கு ஏன் கடைசி ஓவரை தந்தேன் என்று கூறினார். அதில் ” நான் இப்போது மக்களை பயமுறுத்தும் போக்கை கையாளுகிறேன். நான் சிரித்தால் எல்லாம் சரியாகி போகும். நான் வீரர்களை கடினமான சூழ்நிலையில் வைக்க விரும்புகிறேன். இப்படியான அனுபவங்கள் எங்களுக்கு பெரிய போட்டிகளில் உதவும். இப்படித்தான் நாமே நமக்கு சவால் விடப் போகிறோம். இன்று எல்லா இளம் வீரர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஐபிஎல் தொடரில் சிவம் மாவி நன்றாக பந்து வீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவரை நான் எளிமையாக வீசச் சொன்னேன். அவர் பந்தில் அடி விழுந்தாலும் அவருக்கு நான் தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தேன். நான் எனது பந்துவீச்சில் ஸ்விங் செய்வதில் நன்றாக பயிற்சி செய்து தேறி உள்ளேன். நான் தொடர்ந்து புதிய பந்தை கையில் எடுத்து வீசுவதாகவும் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்!