அர்ஸ்தீப் இதனால்தான் நோ-பால்கள் வீசுகிறார் – முகமது கைஃப் ஆச்சரிய தகவல்!

0
764
Arsdeep

நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மைதானத்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது!

ராஞ்சி மைதானத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பந்து எல்லா நேரத்திலும் சுழன்று எகிறி திரும்பியது. இதை இரு அணிகளுமே எதிர்பார்க்காத பொழுது, நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக பயன்படுத்தி வெற்றி கண்டது!

- Advertisement -

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்த பொழுது கடைசி ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஒரு நோபால் வீசியும் இருந்தார். அவர் கடைசி ஓவர் வீசி விட்டுத்தந்த ரன்கள்தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போதும் இவர் அதிகபட்ச நோபால்களை வீசி மோசமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசும்பொழுது “அர்ஸ்தீப்க்கு நீண்ட ரன் அப் உள்ளது. இதனால் அவர் ஸ்டெப்பில் தவறு ஏற்பட்டு நோபால்கள் விழ அதிக வாய்ப்பு உள்ளது. இதுவே அவரது ஓவர் ஸ்டெப் நோபால்களுக்கு காரணம். சில நேரங்களில் அவர் ஸ்டெம்புக்கு இரண்டு பக்கங்களில் இருந்து உடனுக்குடன் மாறி வீசுவதும் ஒரு காரணம். எனவே அவர் பந்துவீச்சின் அடிப்படை விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். மேலும் அவர் நிதானமாக இருக்க வேண்டும். அவர் ஒரு நல்ல பந்துவீச்சாளர் ஆனால் அவருக்கு நேற்றைய நாள் சிறப்பாக அமையவில்லை” என்று கூறி இருக்கிறார்!

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரும் தற்போதைய ஐபிஎல் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் முகமது கைஃப் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” முகமது கைஃப் கூறியது போல அவரது ரன் அப் தேவைக்கு அதிகமாக உள்ளது. நீங்கள் அதிக தொலைவு ஓடி உடல் சோர்வடைந்தால் பந்து வீசும் சக்தியை பெற முடியாது. நீங்கள் ஒரு பந்துவீச்சாளராக இதையெல்லாம் கண்டுபிடித்து ஆக வேண்டும். அவர் நல்ல வைடு யார்க்கர்களை வீசக்கூடியவர். ஆனால் நேற்று பெரும்பாலும் ஸ்லாட்டில் வீசினார்!” என்று கூறியிருக்கிறார்!