“தோனி மற்றும் பிளமிங் இவர்கள் இருவருக்கும் எனக்கும் இருக்கும் ஒற்றுமை இதுதான்”! – முதல் டி20’க்கு முன்பாக சிஎஸ்கே வீரர் பேட்டி!

0
507

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூஸிலாந்த அணி  மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0  என்ற கணக்கில் இழந்தது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி தொடர் இன்று தொடங்க இருக்கிறது .

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்க இருக்கும்  முதல் டி20 கிரிக்கெட் போட்டியில்  ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை  எதிர்கொள்ள இருக்கிறது  நியூசிலாந்து அணி . அந்த அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சனுக்கு  இந்தத் தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டு இருப்பதால் இந்தப் போட்டிகளுக்கு மிச்சல் சான்ட்னர் கேப்டனாக செயல்பட இருக்கிறார் .

- Advertisement -

இதுவரை 10 டி20 போட்டிகளில்  நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக  இருந்திருக்கிறார் சான்ட்னர். முதலாவது டி20 போட்டிக்கு முன்பாக  செய்தியாளர்களிடம் பேசிய அவர்  “சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும்  தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்  ஆகியோரிடம் இருந்து  தலைமைப் பண்புகளை கற்றுக் கொண்டதாக கூறினார் . கடந்த சில ஆண்டுகளாக  எம் எஸ் தோனி உடன்  சிஎஸ்கே அணியில் ஆடி வருவது  நிறைய விஷயங்களை  கற்றுக்கொள்ள உதவி இருக்கிறது  என்று கூறினார் ..

 • இதுபற்றி தொடர்ந்து பேசிய சான்ட்னர்” எம் எஸ்.தோனி மற்றும் ஸ்டீபன் பிளம்பிங் ஆகியோர்  மிகவும் அமைதியாக இருப்பார்கள். போட்டியின் எந்த சூழலிலும்  பதற்றமில்லாமல் இருக்கும் குணத்தில்  அவர்கள்  இருவருக்கும் எனக்கும்  ஒற்றுமை உள்ளதாக உணர்கிறேன். எம்எஸ்.தோனி உடன் இணைந்து சிஎஸ்கே அணியில் ஆடுவது  ஒரு அழகான அனுபவம் . மேலும் அது நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது . முதல் டி20 போட்டியை  எம்எஸ்.தோனியின் சொந்த ஊரில்  ஆட இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாம் எவ்வளவுதான் அமைதியாக இருந்தாலும்  போட்டி என்று வந்துவிட்டால் ஒரு சிறிய பதட்டம் நமக்குள் இருக்கும். அது போட்டியில் இருக்கக்கூடிய சுவாரசியத்தால் வருவது என்று தெரிவித்தார். மேலும் இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்க இருப்பதாகவும் கூறினார் . 2022 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பைக்கு  பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி  அங்கு நடைபெற்ற  டி20 தொடரை 1-0, என்ற கணக்கில் கைப்பற்றியது  குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ராஞ்சியில் நடைபெறும் இந்த போட்டிக்கு முன்பாக  எம்எஸ்.தோனி இந்திய வீரர்களை  நேற்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் கேப்டன் ஹர்திக் பாண்டியா  மற்றும் அணி வீரர்களை சந்தித்து  அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டு  உரையாடினார் . நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள   துவக்க  ஆட்டக்காரர் ப்ரீத்வி  ஷாவிற்கு  முதல் போட்டியில் வாய்ப்பு இல்லை என்று  கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.