நான் அறிமுகமானபோது தோனி இதைத்தான் கூறினார் ; நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்; ருதுராஜ் நெகிழ்ச்சி!

0
1327
Ruturaj

இந்திய அணியின் எதிர்கால வீரர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்களில் 25 வயதான மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருத்ராஜும் ஒருவர். இவரது நளினமான பேட்டிங்கும், பவர் பிளேவில் வேகப்பந்து வீச்சில் சிக்சர்கள் அடிக்கும் திறனும் இவரை மிக உச்சத்தில் வைத்திருக்கிறது!

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இவர் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே கோல்டன் டக் அடித்து அதிர்ச்சி அளித்தார். அதற்குப் பிறகான இரண்டு போட்டிகளும் இவருக்கு நல்லபடியாக அமையவில்லை.

- Advertisement -

இந்தச் சமயத்தில் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்திருந்தது. கடைசி 3 ஆட்டங்கள் இருக்கும் பொழுது இவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த முறை மிடில் ஆர்டரில் வாய்ப்பு அளிக்கப்பட்டது போல் இல்லாமல், இவரை துவக்க வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் களமிறக்கியது. அந்த மூன்று போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடி 3 அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இதற்கு அடுத்து இவரது மதிப்பு உயர்ந்தது. 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடி 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். அந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் ஆவதற்கு இவரது பேட்டிங் ஒரு மிக முக்கிய காரணமாகும்.

இதற்குப் பிறகு தனது மாநில மகாராஷ்டிர அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் மீண்டும் பட்டையைக் கிளப்பி இந்திய அணிக்குள் வந்தார். இந்திய அணிக்கு இதுவரை இவர் 9 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார். இன்னும் இவரிடமிருந்து பெரிய ஆட்டங்கள் வரவில்லை. ஆனாலும் பெரிய ஆட்டங்களை ஆடக் கூடிய திறமையும் தரமும் இவரிடம் இருப்பதை இந்திய அணி நிர்வாகம் உணர்ந்தே இருக்கிறது.

- Advertisement -

இவர் முதன்முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானபோது, அணியின் கேப்டன் தோனி தன்னிடம் என்ன கூறினார் என்று நினைவுகூர்ந்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும் பொழுது “நான் அறிமுகமான போது அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அவர் விளையாட்டை ரசிக்க சொன்னார். இந்த அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய சாதனையாகும். இந்த டிரஸ்ஸிங் ரூமில் மிகத் திறமையான வீரர்கள் பகிர்ந்து இருக்கிறார்கள். மேலும் பல சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். எனவே இதையெல்லாம் உணர்ந்து ” நீங்கள் விளையாட்டை உணர்ந்து ரசித்து விளையாட வேண்டும்” என்று தோனி கூறியதாக நான் உணர்கிறேன் ” என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மிகவும் நல்ல சூழலை கொண்ட ஒரு நல்ல அணியில் நான் இருந்ததற்கு மிகவும் நன்றி உடையவனாக இருக்க வேண்டும். மேலும் தோனி என்னைச்சுற்றி இருந்தது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் முதல் ஆட்டத்தில் கோல்டன் டக் ஆகிய பொழுது நான் பின்னடைவைச் சந்தித்ததாக நினைக்கவில்லை. இப்போது திரும்பிப் பார்த்தால் ஆரம்பத்தில் இருந்து நான் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் நிர்வாகமும் அணியும் பயிற்சியாளரும் கேப்டனும் என்னை நன்றாக உணர்ந்தனர். முழு சென்னை அணிக்கும் மற்றும் பயிற்சியாளர் கேப்டனுக்கும் நான் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.