தோனி பாய் சொன்னது இதுதான்.. இந்திய டீம்ல வரது மட்டும் இல்ல வேர்ல்ட் கப் ஜெயிப்பேன் – சிவம் துபே மாஸ் பேட்டி!

0
1926
Dhoni

டி20 கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்த பிரபலம் அடைந்திருக்கின்ற காரணத்தினால், உலகின் பெரிய அணிகள் எல்லாமே டி20 கிரிக்கெட்டை ஒரு ஆண்டில் அதிகம் விளையாட வேண்டி இருக்கிறது. மேலும் சிறிய அணிகளுக்கு டி20 கிரிக்கெட்தான் அடிப்படையான கிரிக்கெட்டாகவே இருக்கிறது!

டி20 கிரிக்கெட்டுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கின்ற காரணத்தினாலேயே, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பை நடத்த வேண்டிய நிலையில் ஐசிசி இருக்கிறது. இதன் காரணமாக எல்லா பெரிய அணிகளும் தங்களது டி20 அணியை பலம் வாய்ந்ததாக மாற்ற ஆரம்பித்து இருக்கின்றன.

- Advertisement -

ஒவ்வொரு அணியும் தங்கள் டி20 அணியை சீரமைக்கும் பொழுது, அதில் ஆல் ரவுண்டர்களையும், பவர் ஹிட்டர்களையும் தேடி தேடி சேர்த்து வருகிறது. இவர்களுடைய பங்களிப்பு இரண்டு வீரர்களுக்கு சமமானதாக இருக்கிறது.

தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமும் தங்களது டி20 கிரிக்கெட் அணியை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக மிதவேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் பவர் ஹிட்டர் சிவம் துபாய் இந்திய அணிக்குள் மீண்டும் சேர்த்து இருக்கிறது.

கடந்த வருடம் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட சிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கை, அந்த அணி நிர்வாகத்தின் வழிகாட்டுதலால், மிகச் சிறப்பாக மாறியதோடு, இந்திய அணியிலும் வாய்ப்பு பெரும் அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. தற்பொழுது அவர் ருதுராஜ் தலைமையிலான ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது சிவம் துபே தன்னுடைய இலக்கு பற்றி பேசுகையில் “முதலில் உங்களுக்கு கடின உழைப்பு அவசியம். பிறகு நம்பிக்கை தேவை. உங்கள் கேப்டன் மற்றும் உங்கள் அணி நிர்வாகம் மற்றும் உங்கள் சகவீரர்கள் உங்களால் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும். நான் மூன்று விஷயங்களை சென்னை அணியில் பெற்றதாக நினைக்கிறேன். நான் சுதந்திரமாக விளையாட வேண்டும், மேலும் நான் என் விளையாட்டை விளையாட வேண்டும், ஸ்ட்ரைக் ரேட்டை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

நான் கடந்த ஆண்டு 300 ரன்கள் எடுத்தது போல இந்த ஆண்டு நினைக்கவில்லை. இந்த ஆண்டு நான் 600 ரன்கள் எடுக்க விரும்பினேன். எனக்கு அதற்கேற்ற பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன். எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மிகவும் உறுதுணையாக இருந்தது. அவர்கள் எனக்கான ரோலை தெளிவாக வைத்திருந்தார்கள். நம்பிக்கையையும், நல்ல பயிற்சியையும் தந்தார்கள். அதனால் எல்லாமே சரியாக, சரியான இடத்தில் வந்தது.

எனது இலக்கு இந்தியாவுக்காக விளையாடி நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் நாட்டுக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்வது ஆகும். நான் செல்லும் திசை சரியாக இருக்கிறது. மேலும் தோனி பாய் எப்படி விளையாடினார்? என்று நான் அவரிடம் ஆலோசனை கேட்பேன். அவர் எப்போதும் என்னிடம் ‘கிராப் மெல்ல உயரும் பிறகு எல்லாம் சரியாகிவிடும்.உனக்கான நேரம் வரும்’ என்று கூறுவார் என்று கூறி இருக்கிறார்!