“இதுதான் நாங்க.. இதுதான் எங்க தகுதி.. இனிமேல்தான் எல்லாம்!” – வெற்றிக்கு பின் கம்மின்ஸ் சூசகமான எச்சரிக்கை!

0
289
Cummins

தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி சரியான முறையில் ஆரம்பிக்கவில்லை. ஆனால் தற்பொழுது சரியான பாதையில் திரும்பி இருக்கிறது.

இன்று டெல்லியில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 399 ரன்கள் ஆஸ்திரேலியா அணி பிடித்தது. டேவிட் வார்னர் சதம் அடிக்க, மேக்ஸ்வெல் 40 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

- Advertisement -

பேட்டிங்கில் கலக்கிய ஆஸ்திரேலியா மீண்டும் பந்துவீச்சுக்கு வந்து நெதர்லாந்து அணியை 90 ரன்களுக்கு சுருட்டி, 309 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையை படைத்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்திலேயே இருந்தாலும் கூட, அந்த அணியின் ரன் ரேட் மிகவும் நல்ல நிலைக்கு சென்று இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பை பெறுவதில் சிக்கல்கள் இன்னும் அதிகரித்து இருக்கிறது.

தற்பொழுது ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளை வென்றிருக்கிறது. அதேசமயத்தில் இங்கிலாந்து நான்கு போட்டிகளில் ஒரு போட்டியை மட்டும் வென்று புள்ளிப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது ” இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது. மேக்ஸ்வெல் விளையாடிய விதம் மிகவும் வேடிக்கையான நம்ப முடியாத ஒன்று. அவருடன் வந்த 100 ரன் பார்ட்னர்ஷிப்பில் நானும் சமமாக ரன் அடித்தேன் என்று நினைக்கிறேன். ( சிரிக்கிறார் )

நாங்கள் எங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு விளையாடத் தொடங்கி, நாங்கள் எப்படி பேசி திட்டமிடுகிறோமோ அப்படியே விளையாடி இருக்கிறோம். எங்களிடம் இன்று மேலும் ஒரு நல்ல பேட்டிங் பவர் பிளே இருந்தது. போலவே நல்ல பவுலிங் பவர் பிளேவும் அமைந்தது.

நாங்கள் இன்று பெரிய அளவில் அதிர்ஷ்டங்கள் ஏதும் இல்லாமல் நல்ல வகையிலேயே பந்துவீசி இருக்கிறோம். ஆடம் ஜாம்பாவுக்கு இன்னும் ஒரு நான்கு விக்கெட்டுகள் கிடைத்திருக்கிறது.

அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முடிந்த வரையில் நாங்கள் சிறப்பாக தயாராகி இருக்கிறோம். அவர்கள் ஏற்கனவே தரம்சாலா மைதானத்தில் விளையாடி இருக்கிறார்கள். இது ஒரு உலகக் கோப்பை தொடர், அதில் இது ஒரு மிக முக்கியமான பெரிய போட்டி!” என்று கூறியிருக்கிறார்!