“சூரிய குமாரின் பலவீனம் இதுதான்” – இங்கிலாந்து நாசர் ஹுசைன் வெளியிட்ட தகவல்!

0
3794
Sky

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி நாளை அடிலய்டு மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது!

இந்தப் போட்டியில் இந்திய அணியில் உள்ள சூரியகுமார் யாதவ் மீது தான் அனைவரது கவனமும் இருக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த கவனமும் சூரியகுமார் யாதவ் மீதுதான் இருக்கிறது!

- Advertisement -

சூரியகுமார் யாதவ் முதல் சுற்றில் 5 போட்டிகளில் 225 ரன்கள் மூன்று அரை சதங்களுடன் அடித்திருக்கிறார். இதில் இரண்டு ஆட்ட நாயகன் விருதும் பெற்றிருக்கிறார். இதில் மிக முக்கியமான விஷயம் அவர் பேட்டிங்கில் நடுவரசையில் வந்து 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதுதான். உலக டி20 கிரிக்கெட்டில் இவரது இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கி இந்த அளவிற்கு அதிரடியாக விளையாட கூடியவர்கள் யாருமே கிடையாது.

இந்த சிறப்பு காரணத்தால் சூரியகுமார் யாதவ் உலகின் எல்லா பேட்ஸ்மேன்களையும் விட அபாயக்கரமான பேட்ஸ்மேனாக மாறுகிறார். எனவே அவரை எப்படி வீழ்த்துவது என்கின்ற வியூகங்களை எல்லோரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்!

இந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” இது வேடிக்கையானது. நான் கிரிக்கெட் விஸ் தோழர்களிடம் சூரிய குமாரின் பலம் மற்றும் பலவீனங்களை எனக்கு வாட்ஸ் அப் செய்யுமாறு கேட்டு இருந்தேன். அவர்கள் எனக்கு அனுப்பியதில் அவருடைய 15 பலங்கள் இருந்தது. அவர் வேகம் மற்றும் சுழற் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக பேட் செய்கிறார். மேலும் ஸ்கொயர் திசையில் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களையும் விட ஸ்கூப் ஷாட் விளையாடுவதில் சிறப்பாக இருக்கிறார்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசியவர் ” ஒரே ஒரு பலவீனம் மட்டும் கிடைத்தது. அது இடது கையில் மெதுவாக வீசப்படும் சுழற் பந்து வீச்சு. ஆனால் இங்கிலாந்து அணியில் அந்த வாய்ப்பு இல்லை. டாவ்சன் அணிக்கு வெளியே இருக்கிறார். என் வகையில் நானாக இருந்தால் என்ன செய்வேன் என்றால் அது வேகமாக வீசும் மார்க் வுட்டை வைத்து சூரியகுமார் யாதவை தாக்குவேன். அவர் ஆர்ச்சரை முதல் பந்தில் சிக்சர் அடிக்க போனது போல் நிச்சயம் இவரிடமும் போவார். இதில் ஏதாவது நடக்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்!