“உலக டெஸ்ட் பைனல் இந்த அணிதான் வெற்றி பெறும்; இந்த நாளில் வெற்றி பெறும்!” – ஏபி டிவில்லியர்ஸ் கணிப்பு!

0
1283
Wtc2023

வேகமாக மாறிவரும் காலச்சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டைக் காப்பாற்றுவதற்காக ஐசிசி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதி பட்டத்தை இழந்தது.

- Advertisement -

தற்பொழுது மீண்டும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்று, இன்று இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

2011ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இந்தியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதற்குப் பிறகு இந்திய அணி எந்த உலகக்கோப்பை தொடரையும் கைப்பற்றவில்லை.

இதற்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றி முற்றுப்புள்ளி வைக்குமா?
என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் நிலவுகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்று தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் தனது கணிப்பைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இது மிகவும் கடினமான வேலை. இரு அணிகளும் சமீபத்தில் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, ஓவலில் நடைபெற்ற முந்தைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை வைத்து, சந்தேகத்திற்கு இடமில்லாத இந்தச் சாதனை வெற்றியின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும்.

என் கருத்துப்படி இந்தியா இந்த டெஸ்டில் ஐந்தாவது நாளில் வெற்றி பெறும். இது ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கலாம் என்று நான் உணர்கிறேன். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். ஆனால் போகப்போக சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!