இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் ரோல் இதுதான் ; தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தை வெளியிட்டுள்ள ராகுல் டிராவிட்

0
117

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக வித்தியாசமான ஷாட்டுகளை பயன்படுத்தி அவர் ஆடிய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த ஆண்டு ஆர்சிபிக்காக கார்த்திக் 16 போட்டிகளில் 183 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். பெங்களூர் அணிக்கு சிறப்பாக விளையாடிய தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு 3 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது. நாளை மறுநாள் நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாட தயாராகி வருகிறார்.

- Advertisement -

நாளை மறுநாள் டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறவிருப்பதை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது அருண் ஜெட்லி மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகின்றனர். ராகுல் டிராவிட் அவர்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார்.

இந்திய அணியிலும் அதை செய்வார் என்று நம்புகிறோம்

பெங்களூரு அணியில் தினேஷ் கார்த்திக் மிக சிறப்பாக விளையாடிய தொடர்ந்து இந்திய அணியில் மீண்டும் அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெருமை பாராட்டி உள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் பெங்களூரு அணியில் அவர் கடைசி ஐந்து மற்றும் ஆறு ஓவர்களில் மிக சிறப்பாக விளையாடினார். அதேவேளையை தான் இந்திய அணியிலும் அவர் இனி செய்யப் போகிறார். அதை இந்திய அணியிலும் பிரதிபலிப்பவர் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இவரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறக்கி விளையாட வைக்கலாம். பெங்களூரு அணியில் அவர் செய்த மாயாஜாலங்களை இந்திய அணியிலும் செய்வார் என்று ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கடுமையாக பயிற்சி எடுத்து வரும் தினேஷ் கார்த்திக்

பயிற்சித் தளத்தில் தினேஷ் வித்தியாசமான ஷாட்டுகளை முறையாக பயிற்சி எடுத்து வருகிறார். ரேம்ப், பிளிக் மற்றும் ஸ்கூப் ஷாட் என அனைத்து ஷாட்களையும் பயிற்சி எடுத்து வருகிறார். ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ள தினேஷ் கார்த்திக் அதை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் செய்வார் என்று நாம் எதிர்பார்ப்போம்.