“புதிய கேப்டனுக்கு இதான் சரியான டைம்” – ஹர்திக் பண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது பற்றி பேசிய முன்னாள் வீரர்!

0
138

ஹர்திக் பண்டியாவை கேப்டனாக போட்டது சரியான நேரம் என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் தீப் தாஸ்குப்தா.

டி20 உலகக்கோப்பை முடிவுற்றவுடன் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது.

குறிப்பாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், வங்கதேசம் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

நியூசிலாந்து தொடரில் முன்னணி வீரர்களான கே எல் ராகுல், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பிலும், ரிஷப் பன்ட் துணை கேப்டன் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஒரு நாள் தொடரில் சிக்கர் தவான் கேப்டன் பொறுப்பிலும் ரிஷப் பண்ட் துணை கேப்டன் பொறுப்பிலும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். வங்கதேச தொடரின் போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்கின்றனர்.

கேஎல் ராகுலுக்கு நியூசிலாந்து தொடரின் போது ஓய்வு கொடுக்கப்பட்டதற்கு முழு காரணம், அவர் டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான வீரராக இருக்கிறார் என்பதால்தான் என்று தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா, “இதுதான் சரியான நேரம்” என்று தெரிவித்திருக்கிறார். அவர் தனது பேட்டியில் கூறும்பொழுது,

“ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பொறுப்பில் நியமித்ததற்கு எனக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மிகவும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் வெள்ளை பந்துகள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட கேப்டனுக்கு கால அவகாசம் வைத்திருக்க வேண்டும். அதற்கு அடுத்ததாக வரும் வீரர்களை வளர்த்து விடுவதற்கும் அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்று விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஹார்திக் பாண்டியா. கோப்பையை வென்று தந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அது தேர்வு குழுவினரின் கவனத்திற்கும் சென்றிருக்கும்.

இதற்கு முன்னர் அயர்லாந்துக்கு எதிரான தொடரின்போது கொடுத்தார்கள். தற்போது பெரிய தொடரான நியூசிலாந்துக்கும் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் சரியான நேரம் இந்த தேர்வு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.” என்று தெரிவித்திருக்கிறார்.