அண்டர் 19 உலக கோப்பை வெற்றி வீரரான ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கருக்கு எந்த ஒரு போட்டியிலும் வாய்ப்பு கொடுக்காத காரணம் இதுதான் – எம்எஸ் தோனி பளிச் விளக்கம்

0
1842

19 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான ராஜவர்தன் ஹங்கர்கேக்கர் மகாராஷ்டிரா அணிக்காக 2021 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறந்த பங்களிப்பினை வழங்கி இருந்தார்.

இவரை இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் கைப்பற்றியது. நிச்சயமாக சென்னை அணியில் இவர் ஏதேனும் ஒரு போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று கடைசி போட்டியில் கூட அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கான வாய்ப்பு ஏன் வழங்கப்படவில்லை என்பதை மகேந்திர சிங் தோனி தற்பொழுது கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் இன்னும் முழுமையாக தயாராக வேண்டும் – எம்எஸ் தோனி

ராஜ்வர்தன் தற்பொழுது நல்ல வேகத்தில் அதே சமயம் நல்ல பவுன்சில் பந்து வீசி வருகிறார். ஆனால் இது மட்டுமே போதுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் இன்னும் ஒரு சில ஏரியாக்களில் அவரை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அவர் தன்னை இன்னும் முழுமையாக தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியம்.

உடனடியாக வாய்ப்பு தருவதை விட அவர்களை தயார் படுத்திக் கொள்ள நாம் போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்க வேண்டும். உண்மையில் அவர் விளையாடுவதை காண நாங்கள் ஆவலாகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் தொடரின் இறுதிப் போட்டியை நல்ல முடிவுடன் முடித்துக் கொள்ள விரும்புகிறோம். ஏதேனும் ஒரு அணியை தேர்ந்தெடுத்து விளையாட விருப்பமில்லை இன்றும் மகேந்திர சிங் தோனி குறிப்பிட்டுக் கூறி இருக்கிறார்.

2022 முதல் 2023-ம் ஆண்டு வரையில் இந்த மகாராஷ்டிரா அணிக்கு டொமஸ்டிக் லெவல் ஆட்டங்களில் ராஜவர்தன் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதையும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அதில் எப்படி தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.