கிரிக்கெட்

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இறுதி நேரத்தில் ருத்ராஜ் களமிறங்காத காரணம் இதுதான் – இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம்

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. மழை குறுக்கிட்டதால் நேற்றைய ஆட்டம் 12 ஓவர்கள் ஆக மாற்றப்பட்டது. முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 12 ஓவர் முடிவில் 108 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி டிரேக்டர் 64*ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய இந்திய அணி 9.2 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி நிர்ணயத்தை இலக்கை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 47* ரன்கள் குவித்தார்.

நேற்றைய போட்டியில் ருத்ராஜ் விளையாட காரணம் இதுதான்

நேற்று இந்திய அணியில் ஓபனிங் வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருத்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்திய அணி பேட்டிங் விளையாடியபோது இஷான் கிஷன் உடன் தீபக் ஹூடா ஓபனிங் விளையாட வந்தார். அதன் பின்னர் ருத்ராஜ் பேட்டிங் விளையாட வரவில்லை.

- Advertisement -

போட்டி முடிந்ததும் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்று விளையாடச் செல்வதற்கு முன்னர் ருத்ராஜுக்கு கால் தசைப் பகுதியில் சிறு நெளிவு ஏற்பட்டது அதன் காரணமாகவே அவர் விளையாட வரவில்லை. நாங்கள் அனைவரும் ஒரு இடம் மேலே சென்று விளையாடினோம்.

அவரை அந்த மாதிரியான நிலையில் விளையாட வைக்க எங்களுக்கு தோன்றவில்லை அது அவருடைய உடல்நிலையை மோசமடையச் செய்யும். எனவேதான் அவருக்கு நேற்று ஓய்வு கொடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே தீபக் ஓப்பனிங் வீரராக விளையாடினார் என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.

Published by