6 ஆண்டுகளுக்குப் பிறகு முகக் கவசத்தோடு ஐ.பிஎல்க்கு வந்து ஆச்சரியப்படுத்திய ரிஷி தவான் – காரணம் இதுதான்

0
10343
Rishi Dhawan with face guard

2022 ஐ.பி.எல் சீசனின் 38-வது ஆட்டத்தில் ஜடேஜாவின் சென்னை அணியும், மயங்க் அகர்வாலின் பஞ்சாப் அணியும், தற்போது மும்பையின் வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இரு அணிகளுக்குமே இது முக்கியமான ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணிக்குத் துவக்கம் வர வந்த தவான்-மயங்க் ஜோடியில் சென்னை அணியினர் மயங்கை சீக்கிரத்தில் வெளியேற்றினர். ஆனால் தவானை கடைசி வரை வெளியேற்ற முடியாததால் அவரின் 88* [59] ரன்களால் பஞ்சாப் அணி 187 ரன்களை குவித்துள்ளது!

இந்த ஆட்டத்தில் ஷாரூக்கான், வைபவ், எல்லீஸ் என மூன்று பேரை வெளியில் வைத்து, ராஜபக்சே, சந்தீப் சர்மா, ரிஷிதவான் என மூன்று பேரை உள்ளே எடுத்திருந்தது. இதில் 32 வயதான ரிஷிதவான் மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்காகவும், இந்திய அணிக்காகவும் விளையாடிவர். இமாச்சல் பிரதேச அணிக்கு கேப்டனான இவரின் தலைமையின் கீழ், கடைசி விஜய் ஹசாரே கோப்பையில் தமிழகத்தை வீழ்த்தி, இமாச்சல் சாம்பியன் ஆனது.

இன்றைய ஆட்டத்தில் பந்து வீச வரும்பொழுது முகக்கவசம் போன்ற ஒன்றை அணிந்து வந்து பந்துவீசினார். இதைப் பார்த்தவர்களுக்கு அது என்னவென்றே புரியவில்லை. முகத்தில் மூக்கோடு பாதிவரை அணிந்துள்ள முகக்கவசம் எதற்காக என்றால், பயிற்சியின் போது பந்து மூக்கில் தாக்கி சிறிய ஆபரேசன் ஒன்று செய்துள்ளதால், ஒரு முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக இதை அணிந்துள்ளார் என்று தெரிய வருகிறது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல் ஆட வந்துள்ள ரிஷிதவான் முகக்கவசம் மூலம் திடீர் கவனம் ஈர்த்துள்ளார்!