கிரிக்கெட்

6 வருடங்களுக்குப் பிறகு ஓப்பனிங் செய்துள்ள ரிஷப் பண்ட் ; திடீரென ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கியதற்கு இதுதான் காரணம்

2016ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக விளையாடிய ரிஷப் பண்ட் ஓபனிங் வீரராக அந்த தொடரில் விளையாடி இருந்தார். ஓபனிங் பேட்ஸ்மேனாக 6 போட்டிகளில் 267 ரன்கள் அந்த ஓவரில் அவர் குவித்திருந்தார். அந்தத் தொடரில் அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 44.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 104.29 ஆகும்.

- Advertisement -

அதன் பின்னர் ஐபிஎல் தொடர் மற்றும் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் அவர் ஓபனிங் பேட்ஸ்மேனாக விளையாடவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகவே இது நாள் வரையில் அவர் விளையாடி வந்தார். அப்படியிருக்க இன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஓபனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கியுள்ளார்.

அவர்கள் ஆண்டுகள் கழித்து மீண்டும் ஓபனிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இணைந்து ஓபனிங் விளையாடினர். அந்த போட்டியில் இஷான் கிஷன் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. அதனை எடுத்து இன்று 2வது போட்டியில் அவர் அணியில் இடம்பெறவில்லை.

அவருக்கு மாற்று வீரராக கேஎல் ராகுல் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நிச்சயமாக ரோஹித் மற்றும் கே எல் ராகுல் ஜோடி தான் ஓபனிங் வரிசையில் விளையாடப் போகிறது என்று அனைத்து ரசிகர்களும் நினைத்து நிலையில், ஆச்சரியமாக ரோஹித் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி ஓபனிங் விளையாட வந்தது.

- Advertisement -

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் எப்போதும் வலது மற்றும் இடது கை காம்பினேஷன் சரியாக கை கொடுக்கும். அதன்படி இந்த முடிவை இந்திய நிர்வாகம் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் சிறப்பாக ஓபனிங் இடத்தில் விளையாடினால் வருங்காலத்தில் அவர் ஓபனிங் இடத்திலேயே நிரந்தரமாக விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்களில் கெமார் ரூச் ஆட்டமிழந்தார். மற்றொரு ஒப்பனர் ரிஷப் பண்ட் 18 ரன்களில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

Published by