டுவிட்டர் வலைத்தளத்தில் டெவால்ட் பிரேவிஸ்சிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ் – காரணம் இதுதான்

0
1353
Dewald Brevis and Ben Stokes

இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே மதியம் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 103* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். லக்னோ அணியில் மிக சிறப்பாக விளையாடிய ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -
டெவால்ட் பிரேவிஸ்சிடம் டுவிட்டரில் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் 506 ரன்கள் குவித்து தென்ஆப்ரிக்க அணியை சேர்ந்த டிவால்ட் பிரேவிஸ் தொடர் நாயகன் விருதை வென்றார். இவர் விளையாடும் விதம் அப்படியே அச்சு அசல் ஏபி டிவிலியர்ஸ் விளையாடுவதை போன்று இருக்கும். அதன் காரணமாகவே இவரை அனைவரும் செல்லமாக பேபி ஏபி என்று அழைப்பார்கள். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி சமீபத்தில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மூன்று கோடி ரூபாய்க்கு கைப்பற்றியிருந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 117 ரன்கள் குவித்திருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 172.06 மற்றும் ஆவரேஜ் 29.25 ஆக தற்பொழுது உள்ளது.

இன்று லக்னோ அணிக்கு எதிராக 13 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 31 ரன்கள் குவித்து ருத்ர தாண்டவம் ஆடினார். சமூக வலைதளத்தில் இவரது ஆட்டம் குறித்து ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வந்தனர். அந்த வரிசையில் இங்கிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார்.

- Advertisement -

டிவால்ட் பிரேவிஸ்ஸை பாராட்டும் விதத்தில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் “பிரேவிஸ் = விளையாட்டு வீரர்” என்று பதிவு செய்தார். அவருடைய ஆட்டம் மிக அற்புதமாக இருந்த காரணத்தினால் அவரை வெகுவாக அந்த ஒரு பதிவின் மூலம் பாராட்டினார். ஆனால் துரதிஸ்டவசமாக அவர் ட்வீட் செய்த அடுத்த சில நொடிகளில் ஆவேஷ் கான் வீசிய பந்தில் பிரேவிஸ் ஆட்டமிழந்தார்.

உடனடியாக இன்னொரு ட்வீட்டை ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்தார். அந்த பதிவில் “என்னை மன்னித்துவிடு பிரேவிஸ்”என்று வருத்தத்துடன் பதிவு செய்தார். அவ்வாறு தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பிரேவிஸ் குறித்து பதிவு செய்த ட்வீட்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது