விராட் கோலியின் மோசமான ஃபார்முக்கு இதுவே காரணம், இதை அவர் சரி செய்து விட்டாலே போதும் – விராட் கோலிக்கு அறிவுரை கூறியுள்ள ரிக்கி பாண்டிங்

0
160

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட்கோலி 16 போட்டிகளில் விளையாடினார். 16 போட்டிகளின் முடிவில் நடப்பு ஐபிஎல் தொடரில் அவருடைய பேட்டிங் சராசரி 22.97 ஆக மட்டுமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சற்று சுமாராக விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கடைசியாக அவர் தனது சர்வதேச சதத்தை அடித்திருந்தார்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகப் போகின்றது இன்னும் அவர் தன்னுடைய 71ஆவது சர்வதேச சதத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். விராட் கோலியின் இந்த நிலை குறித்து பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் ஒரு சில விஷயங்களை தற்போது நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

தன் நிலையை விராட் கோலி முதலில் உணர வேண்டும்

பொதுவாக கிரிக்கெட் வீரருக்கு இது போன்ற ஒரு நிலை எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். கடந்த 10 முதல் 12 வருடங்களில் அவர் தொடர்ந்து சிறந்த பார்மில் இருந்தார். அப்படி இருந்த அவருக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்கள் சரியில்லாமல் போகும் நமக்கு பெரிதாக தோன்றுகிறது. ஆனால் இந்தத் தாழ்வு இயல்பான ஒன்றுதான்.

அவருடைய ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் தற்பொழுது அவர்தான் முடிவு எடுத்தாக வேண்டும். அவருடைய இந்த நிலைக்கு அவருடைய டெக்னிக்கல் விஷயம் காரணமா அல்லது அவருடைய மனநிலை காரணமா என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அதை அவர் சரி செய்து அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி விரைவில் பழைய ஃபார்முக்கு வருவார்

கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் எப்பொழுதும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அனுபவத்தில் எனக்குத் தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் உண்மையில் சோர்வடையவில்லை, உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ சோர்வடையவில்லை என்று அடிக்கடி நீங்கள் உங்களை ஒரு வீரராக ஏமாற்றிக் கொள்கிறீர்கள். மன ரீதியாகவோ அல்லது டெக்னிக்கல் ரீதியாகவோ தாங்கள் தற்போது சோர்வடைந்து உள்ளதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விராட் கோலியும் தற்பொழுது அந்த நிலையில்தான் உள்ளார்.

ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட வீரர் என்று எனக்கு தெரியும். நிச்சயமாக இதிலிருந்து அவர் வெகு விரைவில் தன்னுடைய பழைய ஃபார்முக்கு மீண்டு வருவார். விராட் கோலியின் சிறந்த ஆட்டங்கள் இனி வரும் நாட்களில் நாம் கண்டுகளிக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.