இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டிற்கு ரோஹித் ஷர்மா தேர்வு செய்யவுள்ள 11 வீரர்கள் இவர்கள் தான் – வாசிம் ஜாபர் கணிப்பு

0
291
Wasim Jaffer predicts Playing XI of Ind for 2nd Sl Test

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்ற முடிந்தது.போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 174 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 178 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்சும் சேர்த்து மொத்தமாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். போட்டியின் முடிவில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நாளை 2வது டெஸ்ட் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. பகலிரவு போட்டியாக நடைபெறவிருக்கும் இந்த ஆட்டம் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் 400வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கப் போகும் இந்திய வீரர்களை கணித்துள்ள வாசம் ஜாபர்

நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பபிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தற்போது கணித்துள்ளார். நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் ஜெயந்த் யாதவ் வெளியே உட்கார வைக்கப்படுவார். அவரது இடத்தில் அக்ஷர் பட்டேல் அல்லது முகமது சிராஜ் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் அணியில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

அக்ஷர் பட்டேல் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஐந்து 5 விக்கெட் ஹால் உட்பட மொத்தமாக 36 விக்கெட்டுகளை கைப்பற்றி நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார். எனவே நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இவரை இந்திய நிர்வாகம் விளையாட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதேசமயம் நாளை நடைபெற இருக்கும் ஆட்டம் பகலிரவு போட்டி என்பதால், முகமது சிராஜையும் விளையாட வைக்க இந்திய நிர்வாகம் யோசிக்கும்.

- Advertisement -

எனினும் இறுதியில் இந்த இரு வீரர்களில் ஏதேனும் ஒரு வீரர் நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக ஜாபர் கூறியுள்ளார். வாசிம் ஜாபர் கணித்துள்ள இந்திய அணியின் பிளேயிங் 11 :

ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ரவி அஸ்வின், அக்சர் படேல் / முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் முகமது ஷமி.

இலங்கை அணி கவனமாக இருக்க வேண்டும்

மேலும் பேசிய அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு ஸ்பின் பந்து வீச்சாளருடன் விளையாடிய காரணத்தினால் தோல்வி அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் முதல் இன்னிங்சில் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடவில்லை. எனவே நாளை நடைபெற இருக்கும் ஆட்டத்தில் அவர்கள் குறைந்த பட்சம் முதல் இன்னிங்சில் 450 ரன்களுக்கு மேல் குவித்தாக வேண்டும். மறுபக்கம் இரண்டு ஸ்பின் பந்து வீச்சாளர்களுடன் அவர்கள் களமிறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.