டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் இவர்தான் முக்கியமான வீரர் – புகழ்ந்து தள்ளிய ஆஷிஸ் நெக்ரா

0
84
Sky

தற்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துவக்க வீரராக அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியால் மேலே அனுப்பப்பட்டதிலிருந்து இந்திய அணியின் டாப் ஆர்டர் என்பது ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி என்று மிக பலமாக விளங்கியது. இந்திய அணிக்கு அளிக்கப்பட்டுள்ள ரன்களில் அதிகபட்ச ரன்களை இந்த மூவர் தான் அடித்திருக்கிறார்கள்.

ஆனால் தற்போதைய இந்திய அணி இதற்கு நேர்மாறாக இருக்கிறது. குறிப்பாக இந்திய டி20 அணி. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அணிக்கு திரும்ப வந்திருக்கும் கே எல் ராகுல் தனது இயல்பான பேட்டிங்கை திரும்பப் பெற மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார். அவரால் பந்துகளுக்கு எளிதாய் ஆடவே முடியவில்லை. இன்னொரு புறத்தில் மற்றுமொரு தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது பழைய அதிரடி ஆட்டத்தை இழந்து நிற்கிறார். விராட் கோலி இப்போதுதான் விட்டதைப் பிடிப்பதற்காக தயாராகி வருகிறார்.

- Advertisement -

இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது என்று கூற வேண்டும். ஆனால் அதே சமயத்தில் இந்திய அணியின் நடு வரிசையும் ஃபினிஷிங் இடமும், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோரால் பலமாக இருக்கிறது. இவர்கள்தான் இப்போதைய இந்திய டி20 அணியின் வெற்றிகளில் அதிக அளவு பேட்டிங் துறையில் பங்காற்றி வருகிறார்கள்.

இதில் 31 வயதான சூர்யகுமார் யாதவ் உச்சகட்ட பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவர் மொத்தம் 23 இன்னிங்சில் 177.51 ஸ்டிரைக் ரேட்டில் எதிரணிகளை மொத்தமாய் சீர்குலைய வைக்கிறார். அவருக்கு பந்து வீசுவது எப்படி என்று யாருக்குமே புரியவில்லை. 360 டிகிரியில் மைதானத்தில் எல்லாப் பக்கங்களிலும் விளையாடுவது அவருடைய பலமாக இருக்கிறது.

சூரியகுமார் யாதவ் குறித்து இந்திய அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர்மான ஆசிஷ் நெக்ரா தனது கருத்துக்களை சற்று விரிவாக பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறும் பொழுது ” டி20 உலக கோப்பையில் பேட்டிங் வரிசையில் சூரியகுமார் யாதவ் எந்த இடத்தில் விளையாடினாலும் அவர் இந்திய அணியின் முக்கியமான வீரராக இருப்பார். அவர் பேட்டிங்கில் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக தன் திறமையை நிரூபித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்கு அவர் இதை செய்து காட்டி வருகிறார். ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போல அவருக்கு பவர் ஹிட்டிங் வாய்க்கவில்லை என்றாலும், அவர் மைதானத்தில் எல்லாப் புறங்களிலும் பந்தை கிளாசை சாதிக்கிறார். அவர் நம்ப முடியாத அளவிற்கு செயல்பட்டு உள்ளார். வருகின்ற டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவருக்கான இடம் என்பது நிச்சயம் ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “சூரியகுமார் அணியில் இருப்பது உங்களுக்கு நெகிழ்வுத் தன்மையை தருகிறது. ஏனென்றால் ரிஷப் பண்ட் விளையாடும் பொழுது 4வது இடத்திலும் சூரியகுமாரை 5வது இடத்திலும் ஆட வைக்க முடியும். டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி உருவாக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இதுகுறித்து கலங்க தேவையில்லை” என்று மேலும் கூறினார்.