“உலகக் கோப்பையில் விளையாட போகும் இந்திய அணி இதுதான்’ – ராகுல் டிராவிட் சூசகமான கருத்து!

0
716

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது . இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி பெற முனைப்பு காட்டும். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் தேதி மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் பற்றிய அறிவிப்பினை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.

- Advertisement -

இந்திய அணி 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்திற்கான உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இதனை மனதில் வைத்து இந்திய அணி நிர்வாகமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகக் கோப்பை கான தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வீரர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட உத்தேச பட்டியலை ஜனவரி மாதத்தில் வெளியிட்டது பிசிசிஐ. அவற்றில் இருந்து 15 வீரர்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தது.

மூன்றாவது போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்தியாவின் உலகக்கோப்பை அணி பற்றிய கருத்தினை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.. அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் ” எங்களுக்கு தேவையான அணி மற்றும் வீரர்களை பற்றி நாங்கள் தெளிவாக இருக்கிறோம். 20 பேர் கொண்ட உத்தேச அணியில் இருந்து 17-18 வீரர்களாகக் குறைத்துள்ளோம் . மேலும் சில வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான காலக்கெடு மற்றும் திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொறுத்து உலகக்கோப்பை அணி தேர்வு இருக்கும்”என தெரிவித்துள்ளார்.

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” எந்த வகையான அணியுடன் களம் இறங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். உலகக் கோப்பையில் ஆடும் வீரர்களுக்கு முடிந்த அளவு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடக்கும் போட்டிகளாக இருந்தாலும் அல்லது வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளாக இருந்தாலும் முடிந்தவரை அவர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தொடர்ந்து இந்தியாவின் உலகக்கோப்பை அணி பற்றி பேசிய ராகுல் டிராவிட் ” உலகக்கோப்பை என்பது மிகப்பெரிய போட்டி ஒன்பது வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறான காலச் சூழ்நிலைகளில் நடைபெற இருக்கிறது. அதற்கேற்றவாறு
15 அல்லது 16 வீரர்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு காம்பினேஷன்களை முயற்சி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.