“2024 ஏலத்தில் சிஎஸ்கே வாங்கியதில் இவர்தான் சிறந்த வீரர்.. காரணம் இருக்கு!” – ஆர்பி.சிங் விளக்கம்!

0
6910
CSK

நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில், குறைவான வீரர்களின் தேவையுடனும், அதே சமயத்தில் பெரிய பணத்துடனும் வந்த ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

அவர்களுக்கு அம்பதி ராயுடு இடத்துக்கு ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருந்தது. கையில் 32 கோடி பணம் இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக முடிந்த ஏலம் அவர்களுக்கு மிகவும் எளிதானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில் ஏலத்தில் சிஎஸ்கே மிகவும் சுலபமாக தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியது.

நிறைய பணம் கையில் இருந்த காரணத்தினால் ஹெட்டுக்கு கூட சிஎஸ்கே முதலில் சென்று கடைசியில் பின் வாங்கியது. இதற்கடுத்து வந்த ரச்சின் ரவீந்தராவை வெறும் 1.80 கோடியில் வாங்கிக் கொண்டது.

தொடர்ந்து வந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூரை 4 கோடிக்கு வாங்கி ஆச்சரியப்படுத்தியது. இதற்கு அடுத்து டேரில் மிட்சலுக்கு 14 கோடி மற்றும் இளம் வீரர் சமீர் ரிஸ்விக்கு 8.40 கோடி கொடுத்து மேலும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

தற்பொழுது ஒட்டுமொத்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பார்க்கும் பொழுது நிறைய பேட்டிங் விருப்பங்களும், நிறைய பந்து வீச்சு விருப்பங்களும் இருக்கின்றன. மகேந்திர சிங் தோனி கிடைக்கும் ஆடுகளத்திற்கு தகுந்தவாறு அணியை அமைக்க மிகவும் வசதியான வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

சிஎஸ்கே வின் ஏலம் குறித்து பேசி உள்ள இந்திய முன்னாள் வீரர் ஆர்பி.சிங் கூறும் பொழுது ” சர்துல் தாக்கூர் நிறைய வேரியேஷன் வைத்திருக்கும் இந்திய பந்துவீச்சாளர். மேலும் அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும். இந்த காரணத்தினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது. ஆனாலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அவருக்காக இன்னும் கொஞ்சம் பணம் ஒதுக்கி இருக்கும்.

ஆனால் அவர் கம்மியான விலைக்கு கிடைத்து விட்டார். அந்த விலையில் அவரை வாங்க முடிந்த காரணத்தினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எளிதாக அமைந்தது. அவர்களால் பணத்தை மிச்சப்படுத்த முடிந்தது. மேற்கொண்டு அந்த பணத்தை வைத்து நிறைய வீரர்களை அவர்களால் வாங்க முடிந்தது.

இதன் காரணமாகவே ஏலத்தில் சிஎஸ்கே இளம் வீரர் ரிஸ்வி பின்னால் நீண்ட தூரம் சென்று பெரிய விலை கொடுத்து வாங்க முடிந்தது. என்னை பொருத்தவரை இந்த ஏலத்தில் சிஎஸ்கே சிறந்த முறையில் வாங்கியது சர்துல் தாக்கூரைதான்!” என்று கூறியிருக்கிறார்!