மும்பை இந்தியன்ஸ் இந்த வருஷம் தோனி டெக்னிக் ஃபாலோ செய்கிறார்கள்; அதான் கீழே போனாலும் டாப்புக்கு வந்துட்டாங்க – முன்னாள் வீரர் கருத்து!

0
5056

மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த வருடம் சிஎஸ்கே அணையின் யுத்தியை பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் ரோகித் சர்மா இன்னும் அணிக்குள் விளையாடி வருகிறார்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சைமன் டவுல்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் 11 போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த சீசனின் துவக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்தது அதன் பிறகு ஒரு வெற்றியை பெற்று மீண்டும் இரண்டு தோல்விகளை சந்தித்து மோசமாக துவங்கியது.

- Advertisement -

இதற்கு முழு முக்கிய காரணம் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, சூரியகுமார் யாதவ் போன்றவர் ஃபார்மில் இல்லை. சூரியகுமார் யாதவ் தனது ஃபார்மிற்கு வந்து விட்டார். ஆனால் ரோகித் சர்மா இன்னும் மோசமாக விளையாடுகிறார்.

கடந்த ஐந்து போட்டிகளில் 12 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா அடித்திருக்கிறார். அதில் இரண்டு டக் அவுட் ஆகும். மொத்தம் 11 போட்டிகளில் 191 ரன்கள் எடுத்திருகிறார். சராசரி 13.4 ஆகும்.

கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் யாரேனும் மோசமாக செயல்பட்டால் அது கேப்டனாகவே இருந்தாலும் ஓரிரு போட்டிகள் வெளியில் அமர்த்தி நம்பிக்கையை பெற வைப்பார்கள். ஆனால் இந்த வருடம் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வைக்கப்பட்டு வருகிறார். அவர் கேப்டன் என்பதற்காக அல்ல. இதற்கு காரணம், அவர் பார்மிற்கு வருவதற்கு ஓரிரு போட்டிகள் போதுமானது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையில் ரோகித் சர்மா தொடர்ந்து அணியில் விளையாட வைக்கப்பட்டு வருவதற்கு காரணம், இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே வின் யுக்தியை பயன்படுத்துகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார் சைமன் டவுல்.

“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முக்கிய வீரராக இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா சரியாக விளையாடாதபோதும் அந்த அணி தொடர்ந்த வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி கடந்த காலங்களில் வாட்சன் மோசமாக விளையாடிய போதும் அவரை தொடர்ந்து பிளேயிங் லெவனில் வைத்திருந்தது. இதற்கு பலனாக, பைனலில் செஞ்சுரி அடித்து வெற்றியை உறுதி செய்து கொடுத்தார். ரோகித் சர்மாவையும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அப்படித்தான் பார்க்கிறது.

எனக்கு இருக்கும் சந்தேகம் எல்லாம், திலக் வர்மா உடல்நிலை சரியாக இல்லாதபோது நேஹால் வதேரா உள்ளே எடுத்துவந்து விளையாட வைக்கப்பட்டார். அவர் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை அடித்து தனது பார்மை காட்டிவிட்டார். இப்போது திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வந்தால் யார் வெளியேறுவார்? தொடர்ந்து திலக் வர்மா வெளியில் அமர்த்தப்படுவது அவருக்கு நம்பிக்கையை உடைக்கும் அல்லவா? ஆகையால், அவரை வெளியில் அமர்த்த முடியாது. இந்த கேள்விக்கு ரோகித் சர்மா என்ன பதில் கூறுவார்? அவரே வெளியில் அமர்வாரா?.” என்றும் கேட்டார்.