“நாங்க கேட்ட ஆடுகளம் இது கிடையாது!” – பாபர் ஆஸம் தோல்விக்குப் பின் பரபரப்பு குற்றச்சாட்டு!

0
416
Babar

பாகிஸ்தான் நாட்டிற்கு சமீப காலத்தில் பெரிய கிரிக்கெட் நாடுகள் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆஸ்திரேலிய அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்தது!

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தது. டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும் மீண்டும் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றுள்ளது!

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் பரபரப்பான கட்டத்தில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை அடைந்தது!

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் நான்கு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் மூன்று வீரர்களும் சதம் அடித்து இருந்தார்கள். அந்த அளவிற்கு ஆடுகளம் பந்து வீச்சிற்கு துளியும் ஒத்துழைக்கவில்லை. இதேபோல்தான் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் வந்த பொழுதும் ஆடுகளம் படு மட்டமாக இருந்தது. இதுகுறித்து அப்போது ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது கருத்தை காட்டமாக தெரிவித்து இருந்தார். ஆனாலும் அடுத்து இங்கிலாந்து அணி தற்போது வந்துள்ள பொழுதும் ஆடுகளத்தில் எந்த உயிரும் இல்லை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் எந்தவித நோக்கமும் இல்லாமல், பேட்ஸ்மேன்களின் சொர்க்கப்புரியாக ஆடுகளத்தை அமைத்து ரசிகர்களுக்கு எந்தவித பரபரப்பையும் திருப்பத்தையும் உண்டாக்கவில்லை. இது சமூக வலைதளத்தில் கிரிக்கட் ரசிகர்கள் இடையே கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் இடையே விவாதத்தை கிளப்பி வந்தது!

- Advertisement -

இந்த நிலையில் இந்த ஆட்டத்தின் தோல்விக்கு பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆடுகளம் குறித்து தனது மௌனத்தை முதன்முறையாக கலைத்திருக்கிறார்.

இது பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் கூறும் பொழுது ” ஆடுகளம் தொடர்பாக நான் நிறைய விஷயங்களை கூறியிருந்தேன். நாங்கள் திட்டமிட்டது வேறு ஆனால் எங்களுக்கு கிடைத்த ஆடுகளம் வேறு. நாங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கேட்டிருந்தோம். அதை வைத்து எங்கள் அணியின் திட்டத்தையும் அமைத்திருந்தோம். ஆனால் ஆடுகளம் அதற்கு மாறாக இருக்க எங்களின் மொத்த திட்டமும் வீணாகிவிட்டது. இது எப்படி நடந்தது என்று எங்களுக்கு புரியவில்லை. ஒருவேளை வானிலை காரணமாக ஆடுகளம் இப்படி ஆகிவிட்டதா என்றும் தெரியவில்லை ” என்று கூறியிருக்கிறார்!