இந்திய அணியின் வெற்றியை மோசமாக விமர்சித்த கவுதம் கம்பீர்!

0
409

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியை விமர்சித்து இருக்கிறார் கௌதம் கம்பீர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்த முடிவு நியூசிலாந்து அணிக்கு எதிர்பார்த்தவாறு அமையவில்லை.

- Advertisement -

ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வந்தது. பின்னர் வந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. வரிசையாக சீரான இடைவெளியில் விக்கட்டுகள் இழந்ததால், இறுதியில் எட்டு விக்கெடுகள் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை துரத்திய இந்திய அணியும் முனைப்புடன் விளையாடவில்லை. தடுப்பாட்டத்தில் இறங்கி அவ்வப்போது விக்கெடுகளையும் இழந்து வந்தனர். இறுதியில் போராடி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இந்திய அணியில் இளம் வீரர்கள் இருந்தும் அவர்கள் துடிப்புடன் விளையாடவில்லை மற்றும் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடுவது சரியானது அல்ல என்றும் விமர்சித்து இருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் கூறியதாவது:

- Advertisement -

“இஷான் கிஷன் பேட்டிங் பற்றி நான் கூறியாக வேண்டும். இன்னும் எத்தனை போட்டிகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழப்பார். அவரின் இடத்தை நிரப்புவதற்கு வீரர்கள் காத்திருக்கின்றனர் என்று புரிய வேண்டும். இளம் வீரராக இருக்கிறார் என்பதால் அறிவுரை மட்டும் கூறிக் கொள்கிறேன். வெளியில் அனுப்ப சொல்வது முறையாகாது. செய்த தவறை திரும்பவும் செய்து ஆட்டமிழக்கிறார். பயிற்சியாளர்கள் அவருடன் லேசவேண்டும்.” என்றார்.

அடுத்ததாக இந்திய அணியின் வெற்றியை பற்றி பேசிய அவர், “இந்திய அணி கொண்டாடும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. சொந்த மைதானத்தில் இவ்வளவு மோசமாக கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று வெற்றி பெறுவது எந்த வகையில் வெற்றியாக இருக்க முடியும். தவறிலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று தெளிவாக தெரிகிறது.” என்றார் .