“உம்ரான் மாலிக்கை இப்படித்தான் கையாள வேண்டும்!” – விராட் கோலி கோச்!

0
421
Umran

இந்திய கிரிக்கெட்டில் ஆரம்பத்திலிருந்து ஒரு மிகப்பெரிய பற்றாக்குறையாக இருந்து வந்தது வேகபந்துவீச்சாளர்கள்தான். பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்தியா மிகச் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களை உருவாக்கும் ஒரு நிறுவனம் போல் இருந்திருக்கிறது. ஆனால் வேகப்பந்து வீச்சு என்ற வகையில் இந்தியா ஒரு நஷ்டமடைந்த நிறுவனம்தான்!

ஆனால் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி கூட்டணி காலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத்துறை எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியையும் எழுச்சியையும் பெற்றது. இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருந்தாலும், அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வேகபந்துவீச்சுக்கு ஆதரவு தரவில்லை என்றால் இந்த வளர்ச்சி இந்த அளவிற்கு சாத்தியப்பட்டு இருக்காது என்பதுதான் உண்மை!

இப்படியான காலகட்டத்தின் தொடர்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் மூலமாக இந்தியாவிற்கு அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் கிடைத்திருக்கிறார். இவர் மணிக்கு தொடர்ச்சியாக 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீச முடியும். இவர்தான் ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டிலும் அதிவேகப் பந்துவீச்சாளர்!

இப்படியான தனித்துவம் பெற்ற இந்த வீரரை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவரை எப்படி மெருகேற்ற வேண்டும் என்று விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சில முக்கியக் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்!

இது பற்றி அவர் கூறும் பொழுது
” உம்ரான் மாலிக் தீ போன்ற இயல்பான வேகத்தை வைத்திருக்கிறார். அவரது உடலமைப்பும் ஓடும் முறையும் தனித்துவமானது. ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு என்னென்ன வேண்டுமோ அதனை அத்தனையையும் சரிபார்த்து அவரை அழகுப்படுத்த வேண்டும். அணி நிர்வாகமும் கேப்டனும் அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியம் ஆனால் எக்ஸ்பிரஸ் வேகம் காரணமாக ரன்கள் பசியவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் பேசியுள்ள அவர் ” அவரது பந்துவீச்சு பாணியை மாற்ற தேவையில்லை. அவரை அவரது வலிமைக்கு ஏற்ப பந்துவீச விடவேண்டும். அவர் இந்தியாவுக்காக விக்கெட் வீழ்த்துவார் என்பதை நிரூபிக்க விட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்!