“என்னோட டி20 டீம் இப்படித்தான் இருக்கும்” – 2024க்கு பக்கா பிளானை சொல்லும் ஹர்திக் பாண்டியா!

0
1444

என்னுடைய அணி இப்படித்தான் இருக்கும் என்று ஆணித்தனமாக பேட்டியளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நியூசிலாந்து சென்று டி20 போட்டிகள் விளையாடிய இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடினார். முதல் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது. இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நன்றாக செயல்பட்டதால் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.. மூன்றாவது போட்டி மீண்டும் மழை காரணமாக பாதியிலேயே ரத்து ஆனது. டிஎல்எஸ் முறைப்படி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

டி20 தொடரை இந்தியா 1-0 என கைப்பற்றியது. டி20 போட்டிகளுக்கு முன்னர் பல்வேறு திட்டங்களையும் அணி வீரர்களை பயன்படுத்துவதையும் பற்றிப்பேசிய ஹர்திக் பாண்டியா, மீண்டும் ஒருமுறை தொடரை கைப்பற்றிய பிறகும் பேசினார்

“வெளியில் இந்திய அணி, இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நிறைய பேசுவார்கள். ஆனால் அது எங்களை ஒருபோதும் பாதிக்காது. என்னுடைய அணி இப்படித்தான் இருக்கும். அன்றைய போட்டிக்கு யார் சரியாக இருப்பார்கள் என பயிற்சியாளர் உடன் ஆலோசித்து சிறந்த அணியை தேர்வு செய்வேன். மேலும் என்னுடைய அணியில் அனைவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும். அவர்களுக்கான நேரம் வரும்வரை சற்று பொறுத்திருக்க வேண்டும்.

மேலும் ஒரு போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டு, யாரும் வெளியிலும் அனுப்பப்படமாட்டார்கள். நிறைய வாய்ப்புகளும் கொடுக்கப்படும். இது சிறிய அளவிலான தொடர் என்பதால் அனைத்து வீரர்களையும் பயன்படுத்த முடியவில்லை. அவ்வளவுதான்.

உதாரணத்திற்காக இன்றைய போட்டியில் 6 பந்துவீச்சாளர்கள் எடுத்துச் சென்றோம். அதே நேரம் அவர்களில் சிலர் நன்றாக பேட்டிங் செய்யக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் ஒன்றில் பங்களிப்பை நன்றாக கொடுப்பர் அல்லது இரண்டிலும் நன்றாக பங்களிப்பை கொடுத்தால், அது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இப்படியான அணியைத் தான் நாங்கள் எடுத்துச் செல்வோம்.

மேலும் வரும் போட்டிகளில் இளம் வீரர்களும் நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுவர். பொறுமையுடன் பயிற்சி செய்து வர வேண்டும். எதிலும் அவசரம் காட்டாமல் இருப்பது சர்வதேச போட்டிகளுக்கு சிறந்தது.” என்றார்.