“ஆஸ்திரேலிய பவுன்ஸ் வேகத்தை இப்படித்தான் சமாளிக்கிறேன்” – சூரியகுமார் யாதவ் அட்டகாச பேட்டி!

0
5079
Sky

இந்திய அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தொடர்ந்து தோற்று அந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் சுற்றுரோடு வெளியேறி வந்தது!

இந்திய அணியின் இந்த அதிர்ச்சிகரமான தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. விராட் கோலி அதற்கு முன்பே கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்க, இந்திய அணியின் அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாத்திரியின் பணிக்காலம் முடிந்திருக்க, புதிய கேப்டனாக ரோகித் சர்மாவும் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் வந்தார்கள்.

- Advertisement -

இவர்களின் வழிநடத்துளின் கீழ் குறிப்பாக இந்திய டி20 கிரிக்கெட் அணியில், தற்போது நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய வீரர்கள் அணிக்கு உள்வாங்கப்பட்டதோடு அணிக்கு விளையாடாமல் இருந்த பழைய வீரர்களும் திரும்ப எடுக்கப்பட்டார்கள்!

இதில் இந்திய டி20 கிரிக்கெட்டுக்கு சூரியகுமார் யாதவ் மிகவும் முக்கியமான வீரராக கருதப்பட்டார். காரணம் அப்பொழுது விராட் கோலி கொஞ்சம் பேட்டிங் ஃபார்மில் இல்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு முழுவதும் சூரியகுமார் யாதவ் மிகவும் அதிசயத்தக்க வகையில் விளையாடுகிறார். டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரராகவும், அதேபோல் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரராகவும் மாறி இருக்கிறார். மேலும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் 190 ஸ்ட்ரைக் ரைட்டில் 78 ஆவரேஜில் 219 ரன்களை மூன்று அரசங்களுடன் குவித்திருக்கிறார்!

இவரது ஆட்ட தயாரிப்பு மற்றும் ஆட்ட அணுகுமுறை குறித்து அவரே கூறும் பொழுது ” மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களை விளையாடும் பொழுது நான் தோல்வி அடைந்ததை விட அதிக வெற்றி அடைந்திருக்கிறேன். எனவே அந்த ஷாட்டுகளை விளையாட நான் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நம்பிக்கையோடு நான் வெளியில் சென்று அடித்த நொறுக்குகிறேன் ” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சூரிய குமார் யாதவ் ” எல்லோரும் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி, நீங்கள் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள பவுன்ஸ் மற்றும் வேகத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்றுதான். ஆனால் நான் பயிற்சி செய்யும் வான்கடே மைதானத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் ஆடுகளங்கள் தான் தரப்படுகின்றன. அதனால் எனக்கு ஆஸ்திரேலிய வேகம் மற்றும் பவுன்ஸ் ஒரு பெரிய பிரச்சினையே கிடையாது. நான் இங்கு பயிற்சி செய்ததைதான் ஆஸ்திரேலியாவில் அடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எனக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் அவ்வளவு ஒன்றும் பெரியதாக தெரியவில்லை. மேலும் அந்த மைதானத்தில் ஃபீல்டர்களுக்கு இடையே நிறைய கேப் இருக்கிறது. நான் அதில் அடித்து வேகமாக ஓடி ரன்கள் எடுத்து அவர்களுக்கு அழுத்தம் கூட்டுகிறேன். மேலும் நான் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும் டிராக்குகளில் விளையாட அதிகம் விரும்புகிறேன். இந்த காரணங்களால் எனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. நான் இதையே தொடர்ந்து செய்யப்போகிறேன் ” என்று கூறியுள்ளார்!