சூரிய குமாரை என்னால் வீழ்த்த முடியும் இப்படித்தான் வீழ்த்துவேன்! – பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சவால்!

0
339
Sky

2023 ஆம் வருட தொடக்கத்தில் இருந்து இந்திய அணி அதிகப்படியான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது இதன் காரணமாக டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . வருகின்ற ஜனவரி மாதம் இலங்கை அணியுடன் ஆன டி20 தொடருடன் இந்தியா அணியின் புது வருட கால அட்டவணை துவங்குகிறது .

இந்திய அணியானது இந்த காலகட்டத்தில் அதிகமான t20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது . கடந்த ஓராண்டாகவே டி20 போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் சூரியகுமார் யாதவ் இவர் அதிரடியாக ஆடி ரன் குவிப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ச்சியாகவும் ஆடி வருவது இவரது பேட்டிங்கின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது .

இந்த ஒரு வருடத்தில் மட்டும் 1164 ரன்கள் டி20 போட்டிகளில் குவித்துள்ள சூரியகுமார் யாதவ் சராசரியாக 46.56 வைத்துள்ளார் இவரது ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆகும் . இந்த ஸ்ட்ரைக் ரெட்டோடு 45 க்கு மேல் சராசரி வைத்திருப்பது தான் இவரது டேட்டிங் இன் சிறப்பம்சமாகும் .

மேலும் தென்னாபிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் போல் சூரியகுமார் யாதவ் ஒரு 360 டிகிரி பிளேயர் ஆகவும் இருக்கிறார் . இவரால் மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை லாவகமாக அடிக்க முடியும். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் ஐசிசி டி20 வீரர்களுக்கான ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறார் சூரியகுமார் யாதவ் . இந்நிலையில் இவரை என்னால் எளிதாக ஆட்டம் இழக்க செய்ய முடியும் என்று பாகிஸ்தானின் முன்னாள் இடது கை வேக பந்து வேகப்பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் கூறியிருப்பது பரபரப்பாகியுள்ளது .

இது குறித்து பேசி உள்ள வஹாப் ரியாஸ் “சூரியகுமார் யாதவிருக்கு நான் பந்து வீச ஆர்வமாக இருக்கிறேன். இன்றைய சர்வதேச t20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் தான் சிறந்த பேட்ஸ்மனாக விளங்குகிறார் என்றாலும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடி உள்ள மூன்று போட்டிகளிலும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்னதான் ஒரு வீரர் 360 டிகிரி பிளேயராக இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு பலகீனம் இருக்கும் . எந்த ஒரு வீரராக இருந்தாலும் நான்காம் மற்றும் ஐந்தாம் ஸ்டம்ப் லைனில் பந்து வீசும் போது நிச்சயமாக அவர்கள் தடுமாறுவார்கள் அதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரது விக்கெட்டை வீழ்த்துவேன்” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக சூரியகுமார் யாதவ் குறித்து தேசிய சோயப் மாலிக் அவரை வெகுவாக பாராட்டினார் . இதுகுறித்து பேசிய அவர் ” சூரியகுமார் யாதவ் மைதானத்தின் தன்மைகளை மட்டும் அலசுவதோடு விட்டுவிடாமல் பந்து வீச்சாளர்களின் மனநிலையையும் வாசிக்கக் கூடியவராக இருக்கிறார் அதனால் அவர்கள் எங்கு எப்படி பந்து வீசுவார்கள் என்று அவரால் முன்கூட்டியே கணித்து விளையாட முடிகிறது” என்று கூறி இருந்தார்.