நாங்க கப் ஜெயிக்க இன்ஸ்பிரேசன் சிஎஸ்கே டீம் தான் – இலங்கை கேப்டன் பதில்!

0
1079

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்த்து தான் இறுதிப்போட்டியில் நம்பிக்கை வந்தது என்று இலங்கை கேப்டன் சனக்கா பேட்டியளித்தார்.

ஆசிய கோப்பை தொடரின் 15 வது சீசன் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றது. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் பலபரிட்சை மேற்கொண்டன. மிகச் சிறப்பாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் செயல்பட்ட இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, ஆறாவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

தொடர் நாயகனாக வணிந்து ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணி அதளபாதாளத்தில் இருந்தபோது சரிவிலிருந்து மீட்டவர்களில் முக்கியமானவர் பானுக்கா ராஜபக்சே, 45 பந்துகளில் 71 ரன்கள் அடித்த இவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. கோப்பையை கைப்பற்றிய பிறகு பேட்டியளித்த இலங்கை அணியின் கேப்டன் தஷன் சனக்கா, இறுதிபோட்டியில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு, இதே மைதானத்தில் நடந்த 2021 ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியில் விளையாடிய விதம் ஒரு முக்கிய காரணம் என்று பகிர்ந்து கொண்டார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இலங்கை கேப்டன் சனக்கா கூறுகையில்:

“மைதானத்தில் இருந்து எங்களுக்கு பேராதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நான் நன்றி கூட கடமைப்பட்டிருக்கிறேன். டாஸ் இழந்த பிறகு, முதலில் பேட்டிங் செய்தபோது எனக்கு குழப்பமாக இருந்தது. ஆனால் இதே மைதானத்தில், 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றியையும் பெற்றது. அது எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இந்த தருணத்தில் இருந்தது. அதை மனதில் வைத்து செயல்பட்டோம். ஹசரங்கா மற்றும் ராஜபக்ச இருவரும் இன்றியமையாத பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வீரர் என்று இல்லாமல் இந்த தொடர் முழுவதும் ஒவ்வொரு போட்டிகளில் ஒவ்வொருவர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். இறுதி போட்டியில் ஹஸரங்காவின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு அனைவரும் சோர்வடைந்து காணப்பட்டோம். அந்த தருணத்தில் ஹசரங்கா அபாரமாக செயல்பட்டு அணியை மீட்டு எடுத்தார். கடைசி பந்தில் அடிக்கப்பட்ட சிக்சரால் 170 ரன்கள் வந்துவிட்டது. 160 ரன்கள் என்றால் எளிதில் எட்ட முடியும் என்ற மனநிலை நிலவும். இந்த வகையிலும் எங்களுக்கு நன்றாக அமைந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்தித்தபிறகு நீண்ட நேரம் எங்களுக்குள் ஆலோசனை நிலவியது. அதன் பிறகு சில திட்டங்களை வகுத்துக் கொண்டோம். குறிப்பாக இறுதிப்போட்டியில் எங்களது வீரர்கள் 100% பங்களிப்பை கொடுத்தனர். அதன் காரணமாகவே எங்களால் வெல்ல முடிந்திருக்கிறது. இந்த தருணத்தில் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுவினருக்கு நாங்கள் நன்றிகளை கூறிக் கொள்கிறோம்.” என்றார்.