ஏலத்தில் ஆச்சரியப்படுத்திய இந்திய உள்நாட்டு வீரர் ; அப்படி என்ன சிறப்பு?!

0
2056
vivranth sharma

2023 ஆம் ஆண்டின்  ஐபிஎல் போட்டி தொடருக்கான  வீரர்களின் மினி ஏலம்  கொச்சியில் இன்று நடந்து முடிந்தது.இதில்  மொத்தமாக 43 வீரர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களைத் தவிர  உள்ளூர் போட்டியில்  ஆடிய வீரர்களும்  அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர் என்பது  இந்த ஏலத்தின் மூலம் தெரிய வருகிறது.

ஐபிஎல் வரலாற்றிலேயே  அதிக விலைக்கு  ஏலம் சென்ற வீரர் என்ற பெருமையை  இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர்  ஷாம் கரண் பெற்றார்  இவரை பஞ்சாப் அணி  18.5  கோடிக்கு வாங்கியது. மேலும் ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர்  கேமரூன் கிரீன்  17.5 கோடிக்கு  மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது .

- Advertisement -

இதை தவிர்த்து  நிறைய இந்திய வீரர்களும்  நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இன்றைய ஏலத்தில்  சிறப்பம்சமாக  சர்வதேச போட்டிகளில் ஆடாத  இந்திய வீரர் ஒருவர் 2.6  கோடிக்கு  ஏலம் சென்றது  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி  ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த விவ்ரந்த்  ஷர்மா என்ற வீரரை  ஏலத்தில் போட்டி போட்டு வாங்கியது. இவரை வாங்குவதற்காக  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  தீவிரமான போட்டியில் ஈடுபட்டன. இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  2.6 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது.

இவரை ஏன்  இவ்வளவு போட்டி போட்டுக் கொண்டு ஹைதராபாத் அணி வாங்கியது என்ற கேள்வி நமக்கு எழலாம். இந்த விவ்ரந்த் ஷர்மா ஜம்மு காஷ்மீரை சார்ந்த லெக் ஸ்பின்னர் ஆல்  ரவுண்டர் ஆவார். இவர்  சமீபத்தில் நடந்து முடிந்த விஜய்  ஹசாரே கோப்பையில்  உத்ராகண்டு அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி 124 பந்துகளில் 152 ரன்களை எடுத்தார். இதில் 6 சிக்ஸர்களும்  18  பவுண்டரிகளும் அடங்கும். மேலும் இவர் இந்த போட்டி தொடரில்  ஏழு விக்கெட் வீழ்த்தி   உள்ளார்.

டி20  போட்டிகளை பொருத்தவரை  லெக் ஸ்பின்னர்கள் முக்கியமான பந்துவீச்சாளர்கள் ஆவார்கள் . மேலும் அணியில் ஒரு லெக் ஸ்பின்னிங் ஆல் ரவுண்டர் இருப்பது  அணிக்கு கூடுதல் பலமாகும். இதன் காரணமாகவே  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  இவரை வாங்கியுள்ளது சிறப்பான அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் நல்ல சுழற் பந்து வீச்சாளராகவும் இருக்கிறார்.

- Advertisement -

14  லிஸ்ட் ஏ  போட்டிகளில்   ஆடியுள்ள விவ்ரந்த் சர்மா  ஒரு சதம் உட்பட  534 ரன்கள் குவித்துள்ளார் . மேலும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் . இதுவரை ஒன்பது டி20 போட்டிகளில் ஆடியுள்ள  அவர்  191 ரன்கள்  எடுத்திருப்பதோடு 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.