இந்த இந்திய வீரர் எங்களுக்கு எதிரா ரன் அடிக்க மாட்டார் – இங்கிலாந்து பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி!

0
11030
Hussy

நடப்பு எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்து, அரையிறுதி சுற்று நாளை ஆரம்பிக்க இருக்கிறது!

முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதவிருக்கின்றன. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணி உடன் நாளை மறுநாள் அடிலைடு மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது.

- Advertisement -

நான்கு பெரிய அணிகள், ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் விளையாடுவதற்கு மிக உகந்த நாட்டில், பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன்பாக, உலகக் கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர் ஒன்றின் அரை இறுதியில் மோத இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது!

இங்கிலாந்து அணியில் சமீபத்தில் பயிற்சி பொறுப்பில் தன்னை இணைத்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸ்சி, இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் அரையிறுதி போட்டி பற்றிய தனது கருத்தைக் கூறி இருக்கிறார்!

இது பற்றி பேசிய அவர் ” சூர்யா குமார் யாதவ் ஐபிஎல் தொடரில் பரபரப்பாக பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருபவர். அதையே இப்பொழுது மேல் மட்டத்தில் சர்வதேச ஆட்டத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதை பார்க்கும் பொழுது அருமையாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் பேட்டிங் செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். வெளிப்படையாக சொல்வதென்றால் வியாழக்கிழமை எங்களுடன் ஆட்டத்தில் அவர் சிறப்பான முறையில் செயல்பட மாட்டார் என்று நான் நம்புகிறேன் ” என்று சிரித்தபடி கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா ஒரு அற்புதமான அணி. அவர்கள் போட்டியளிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு சவால் விட்டு நாம் அந்த போட்டியை வெல்ல வேண்டும் என்றால், நாம் அவர்களுக்கு மிக நெருக்கமாக திறமையில் இருக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு சாதகமாக சில விஷயங்களை செய்வதையும், அல்லது அவர்கள் அவர்களுக்காகச் செய்து கொள்வதிலும் தான், இந்த ஆட்டத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வித்தியாசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ” என்று கூறியுள்ளார்!