ஓடிஐ உலகக்கோப்பையில் இந்த இந்திய வீரர் எக்ஸ் பேக்டராக இருப்பார் – ஆச்சரியம் அளித்த சுரேஷ் ரெய்னா!

0
141
Raina

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை அணியாக ஒருங்கிணைந்து வெளிப்படுத்தி முதன்முறையாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வந்து அசத்தியது!

அதற்குப் பிறகு அப்படி ஒரு வாய்ப்பு இந்திய அணிக்கு 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை வரை அமையவில்லை. அப்பொழுதும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் மகேந்திர சிங் தோனி தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஒருங்கிணைந்து விளையாடி கோப்பையை வென்று வந்து அசத்தியது.

- Advertisement -

இந்த இரண்டு உலகக் கோப்பைகளும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்தவை. ஆனால் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணியாக பார்க்கப்பட்டது. அந்த முறை இந்திய அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கோப்பையை வென்று அசத்தியது.

தற்பொழுது மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்திய மண்ணில் இந்த வருடம் பிற்பகுதியில் நடக்க இருக்கிறது. கடந்த முறை உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த சுரேஷ் ரெய்னா சில புதிய விஷயங்களை நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையோடு பொருத்தி பேசி இருக்கிறார்.

அவர் பேசும் பொழுது ” எனக்கு நினைவிருக்கிறது அப்போது எங்கள் அணியில் சேவாக் பாய், யுவி பாய், சச்சின் பாய் ஆகியோர் பகுதி நேரமாக பந்து வீசக் கூடியவர்களாக இருந்தார்கள். அதேபோல் யூசுப், நானும் இருந்தேன். இடது கை பேட்ஸ்மேன்கள் வரும்பொழுது மகி பாய் எங்களை பந்து வீச அழைப்பார். இதே போன்ற எக்ஸ் காரணியை தீபக் ஹூடா வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ஃப்ளோட்டர் பேட்டர். மேலும் சிறப்பான ஃபீல்டர். ஒரு நல்ல ஆட்டக்காரர். அவரது டி20 ஃபார்மை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சுழற் பந்துவீச்சிக்கு ஏற்ற விக்கெட்டுகள் கிடைக்கும் பொழுது இப்பொழுது நம்மிடம் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் இருக்கிறார்கள். உலகக் கோப்பை நடக்கும் காலத்தில் இங்கு கொஞ்சம் குளிராக இருக்கும். அப்பொழுது திருப்புவதற்கு முடியாமல் வாய்ப்பு இல்லாமல் போகலாம். அதேபோல் ஹர்திக் பாண்டியாவும் தனது வேக மாறுபாட்டால் மிகச் சிறப்பாக செயல்படுவார். சேவாக் பாய் மற்றும் யுவராஜ் பாய் எப்படி பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று பார்த்தோம், யுவி பாய் தனக்கு பந்துவீச்சில் கிடைத்த நம்பிக்கையை பேட்டிங்கிளும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார். உங்களுக்கு நான்கு முதல் ஐந்து ஓவர்கள் கொடுக்கக்கூடிய ஒருவர் இருந்தால் அது கேப்டனுக்கும் எளிதானது. இது உங்களுக்கு நல்ல சமநிலையை கொடுக்கும். தீபக் ஹூடா இப்படியானவர்தான் என்று கூறி இருக்கிறார்!