“இந்த இந்திய வீரரை எப்போதும் நியாயம் இல்லாமல் விமர்சிக்கிறார்கள்!” – அஜித் அகர்கர் கடுமையான தாக்கு!

0
860
Agarker

கிரிக்கெட் உலகில் ஆசிய கண்டத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் இங்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலோ அல்லது ஆடுகளங்களோ பெரிதாகக் கிடையாது!

இப்படியான நிலைமையில் ஆசிய கண்டத்தில் இருந்து கபில்தேவ், வாசிம் அக்ரம், வக்கா யூனுஸ், ஜாகிர் கான், தற்பொழுது ஜஸ்ட்பிரித் பும்ரா ஆகியோர் வேகப்பந்து வேகப்பந்து வீச்சில் செய்திருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடி வரும் வேகப்பந்து பேச்சாளர் உமேஷ் யாதவ் மிகவும் குறிப்பிடத்தக்கவர். டெஸ்ட் போட்டிகளில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத சூழல்களில் எல்லாம் அவர் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் அவரது தகுதிக்கான இடத்தை அடையவில்லை. பல நேரங்களில் அவர் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டு தேவையில்லாத விமர்சனத்தை சுமந்து வருகிறார்.

இதனை இந்திய அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கூறும்பொழுது ” உமேஷ் யாதவ் சில சமயங்களில் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்படுகிறார். அணிக்குள் வந்து பல வருடங்கள் ஆகியும் அவரது வேகம் பெரிய அளவில் குறையவில்லை. அவர் மிகவும் குறைவாகவே மதிப்பிடப்படுகிறார். அவர் தனது கேப்டனுக்கு என்ன வேணுமோ அதை அமைதியாக செய்கிறார். அவரது புள்ளி விவரங்கள் மிகவும் ஈர்க்கக் கூடியவை” என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அவர் மிகவும் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் இந்திய துணை கண்டத்தில் அல்லது ஆசியாவில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிலைமைகள் எப்பொழுதும் கடினமாகவே இருக்கிறது. இப்படியான சூழலில் நீங்கள் ஆசியாவில் விளையாடும்போது உங்கள் கையில் அதிக நேரம் பந்து இருக்காது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தான் இங்கு நிலைமைகள் சாதகமாக அமையும். ஆனால் இதைத் தாண்டி உமேஷ் யாதவ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். வேகம் மற்றும் ஸ்விங் இருக்கும் பொழுது அவர் பெரிய வாய்ப்புகளை பெற்றதில்லை. அனுபவம் வாய்ந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளை அவர் மிகச் சிறப்பாக கொண்டு இருக்கிறார்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -