இது எல்லோர்க்கும் நடப்பது தான் ; மோசமான ஃபார்மில் திணறிக் கொண்டிருக்கும் விராட் கோலிக்கு டேவிட் வார்னர் அறிவுரை

0
78
David Warner advice to Virat Kohli

கடந்த சில வருடங்களில் விராட் கோலி சர்வதேசப் போட்டியிலும் சரி ஐபிஎல் தொடரிலும் சரி முன்பு போல அதிரடியாக விளையாடுவதில்லை. குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் மிக சுமாராகவே விளையாடி வருகிறார். 10 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள அவர் மொத்தமாக 186 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இதில் இரண்டு போட்டிகளில் அவர் கோல்டன் டக் ஆனது குறிப்பிடத்தக்கது.

10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அடித்துள்ளார். அந்த போட்டியிலும் 53 பந்துகளில் 58 ரன்கள் குவித்து மிக மெதுவாகவே அவர் விளையாடினார். நிறைய பந்துகளை பிடித்து அவர் மெதுவாக விளையாடியதால், மற்ற பேட்ஸ்மேன்கள் மத்தியில் நெருக்கடியை ஏற்படுத்தினார். விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் உள்ளதால் அவர் குறித்து ரசிகர்கள் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கருத்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
நம்பிக்கையை மட்டும் இழந்து விடவேண்டாம் – டேவிட் வார்னர்

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கையில் அன்பை அனுபவியுங்கள். கிரிக்கெட் விளையாட்டை பொருத்தவரையில் எப்பொழுதும் வடிவம் தற்காலிகமானது, வகுப்பு தான் நிரந்தரமானது. உலகில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரருகும் இது நடக்கும். எனவே உங்கள் நம்பிக்கையை நீங்கள் இழந்துவிடக் கூடாது.

எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஒரு கட்டத்தில், ஏற்ற இறக்கத்தை அனுபவித்துதான் தீர வேண்டும். மீண்டும் பழைய இடத்திற்கு (பழைய ஃபார்மிற்கு) செல்ல நீண்ட நாட்கள் கூட ஆகலாம். உங்கள் நம்பிக்கையை மட்டும் நீங்கள் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உங்களுக்கான அடிப்படைகள் உடன் நீங்கள் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று விராட் கோலிக்கு நம்பிக்கை நிறைந்த செய்தியை டேவிட் வார்னர் கூறியுள்ளார்.

இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்

9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே டெல்லி அணி வெற்றி கண்டுள்ளது. அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அது சம்பந்தமாகவும் டேவிட் வார்னர் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

“புள்ளிப் பட்டியலில் நாங்கள் தற்பொழுது பின்தங்கி இருக்கிறோம். இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற, இனிவரும் போட்டிகளில் நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கும் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணியை வீழ்த்த வேண்டும். ஏனென்றால் அவர்களும் எங்களை போலவே சமமான புள்ளிகளைப் பெற்று இருக்கின்றனர்.

மறுபக்கம் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்க வேண்டும். லீக் தொடர் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. இறுதியில் என்ன முடிவு கிடைக்கப் போகிறது என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று வார்னர் கூறியுள்ளார்.