இந்திய அணிக்கு இந்தப் பையன்தான் சரியான எதிர்கால கேப்டன்! – முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் கணிப்பு!

0
1317
ICT

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்து வருகிறார். டி20 அணிக்கு சமீபத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக நிரந்தரமாக நியமிக்கப்பட்டாரா என்று இன்னும் தெளிவாகப்படவில்லை.

இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா கேப்டன் பதவியில் தொடர மாட்டார் என்றே தெரிகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ரோகித் சர்மாவுக்கு பிறகு மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வருவது கடினமான ஒரு வேலை. ஏனென்றால் அவரது உடல் தகுதி மிகவும் சிக்கலானது. அவர் மிக எளிதில் காயம் அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய அணி நிர்வாகம் எதிர்காலத்திற்கான ஒரு கேப்டனை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

தற்போது இது குறித்து இந்திய அணியின் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் சில முக்கியமான கருத்துக்களை தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் ஒரு இளம் வீரரை முன்வைத்து கூறி இருக்கிறார்.

அவர் பேசும் பொழுது ” ஸ்ரேயாஸ் இயல்பிலேயே நல்ல தலைமை குணம் கொண்டவர். அவர் இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் தற்போது கொல்கத்தா அணிகளை வழி நடத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக செயல்படுகிறார். இது அவரை கேப்டன் பதவிக்கு மேலும் சிறப்பானவராக ஆக்குகிறது. வீரர்கள் எப்படி விளையாட விரும்புகிறார்களோ அவர்களை அப்படியே விடக் கூடிய கேப்டன். அவர் தந்திரோபாயமாகவும் அதே சமயத்தில் கடினமாகவும் விளையாட்டை ஒரு கேப்டனாக சிந்திக்கிறார். அவர் விளையாட்டை பகுப்பாய்வு செய்கிறார். மேலும் அவர் அணியில் தன் வேலையை மட்டும் பார்ப்பவர் கிடையாது. அவர் அணி வீரர்களின் ஆட்டம் முன்னேற்றம் குறித்து சிந்திப்பவராகவும் உதவி செய்பவராகவும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ரோகித் சர்மா கேப்டன் காலத்திற்குப் பிறகு கேப்டன் பதவிக்கு ஸ்ரேயாஸ் நல்லதொரு வேட்பாளர். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவராக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் அவர் கொண்டிருக்கிறார். வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அவர் ஏன் இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை. கடந்த 12 முதல் 18 மாதங்களாக அவர் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு சீரான ரன்கள் தரும் நிரந்தரமான பேட்ஸ்மேன் ஆக இருந்திருக்கிறார். எல்லா நிலைகளிலும் அவர் ரண்களை கொண்டு வந்தார். தற்போது அவர் செய்ய வேண்டியது பேட்டிங்கில் நான்காம் இடத்தில் வந்து அங்கிருந்து ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டியதுதான்” என்று தெரிவித்திருக்கிறார்!