இந்தப் பையன் இந்தியாவுக்கும்; இந்தப் பையன் ஆஸ்திரேலியாவுக்கும் டி20 உலக கோப்பையில் விளையாடனும் – பிரட்லீ எதிர்பார்ப்பு!

0
1580
Brett Lee

இந்த மாதம் அக்டோபர் 16ஆம் தேதி தகுதி சுற்றுப் போட்டிகளோடு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை ஆரம்பிக்கிறது. பிரதான சுற்றுப் போட்டிகள் அக்டோபர் 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது. நவம்பர் 13ஆம் தேதி இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியோடு முடிவுக்கு வருகிறது.

இந்த உலகக்கோப்பையில் 16 அணிகள் பங்கு பெறுகின்றன. 12 அணிகள் பங்குபெறும் பிரதான சுற்றுக்கு 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மற்ற நான்கு இடங்களுக்கு 8 அணிகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிரதான சுற்றுக்குக் கொண்டுவரப்படும். பிரதான சுற்றில் 12 அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்த இரு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அரை இறுதியில் வெல்லும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, இறுதிப் போட்டியில் சாம்பியன் அணி யார் என்று முடிவு செய்யப்படும்.

- Advertisement -

இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இன்று இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறி உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் எதிர்பாராதவிதமாக முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால், இந்திய அணியின் நட்சத்திர நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்கு மாற்றும் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த இடத்திற்கு யார் சரியாக இருப்பார்கள் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பெரிய விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறும்பொழுது ” ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரன் மாலிக் தனது வேகத்தால் மிரட்டினால் நன்றாக இருக்கும். அவர் இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாமல் போனது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும். மேலும் கேமரூன் கிரின் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற வேண்டும். அவர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது எப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். நீங்கள் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீசும்போது ஒன்று ஷார்ட் லென்த்தில் வீசவேண்டும். இல்லையென்றால் ஃபுல் லென்த்தில் வீசவேண்டும். ஆனால் வேகமாக வீச வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வீழ்த்தப்படுவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் திட்டங்களில் எவ்வளவு சிறப்பாக இருந்து கட்டுப்பாட்டோடு பந்து வீசுகிறிர்கள் என்பது முக்கியம். இந்திய துணைக்கண்டத்தில் இருந்துவரும் பேட்ஸ்மேன்களுக்கு, இங்கு கொஞ்சம் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆவது பிரச்சனையாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் இப்படியான பவுன்ஸ் விக்கெட்டில் ஆடுவது இல்லை ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -